தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தருமபுரியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்திடுக

9 Nov 2025, 2:37 pm
தருமபுரியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்திடுக

தருமபுரியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்திடுக

தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.9- தருமபுரியில் தேங்காய் கொள் முதல் நிலையம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட முதல் மாநாடு, முத்து நினைவு அறக் கட்டளை அலுவலகத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பி.பொண்ணு சாமி தலைமை வகித்தார். சங்கத்தின்  மாநில பொதுச்செயலாளர் ஏ.விஜய முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி, துணைத்தலைவர்கள் கே.என்.மல்லையன், எஸ்.தீர்த்த கிரி, துணைச்செயலாளர்கள் கே. அன்பு, பி.சக்கரைவேல், ஆ.ஜீவா னந்தம், ஏ.நேரு, ஆர்.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், வேர்ப்புழு, கருந்தலை புழுக்கள், மஞ்சள் வாடல், சுருள் வெள்ளை ஈக்கள், ஊசி  புழுக்கள், என வரிசையாக நோய்  தாக்குதலுக்கு உள்ளாகி தென்னை  மரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கியுள்ளன. எனவே, தென்னை விவ சாயிகளுக்கு நுண்ணூட்டச்சத்து, உரம், பூச்சி மருந்துகளை மானிய  விலையில் வழங்க வேண்டும். தனி யார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து தேங்காய் கொள்முதலில் லாபக்காய் என்ற பெயரில் 100க்கு 4  முதல் 15 வரை தேங்காய் எடுப்பதை  தடுக்க வேண்டும். தென்னையை தாக்கும் நோய்களை தடுப்பதற்கு, தென்னை வளர்ச்சி வாரியம் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இதற்கு ஒன்றிய அரசு  நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றிய  அரசு தென்னை சார்பு பொருட் களை ஏற்றுமதி செய்ய மானியம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும்  காயர் போர்டில் நடைபெறும் முறை கேடுகளை களைய வேண்டும். தரும புரி மாவட்டத்தில் அரூர், பாலக் கோடு ஆகிய இடங்களில் தேங்காய் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக கே. எல்லப்பன், செயலாளராக பி. பொண்ணுசாமி, பொருளாளராக பி. பி.ராஜா உட்பட 18 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.