தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சர்வர் கோளாறால் நியாய விலைக் கடைகளில் விநியோகம் பாதிப்பு: தீர்வு காண வலியுறுத்தல்

21 Aug 2026, 10:08 pm
சர்வர் கோளாறால் நியாய விலைக் கடைகளில்  விநியோகம் பாதிப்பு: தீர்வு காண வலியுறுத்தல்

சர்வர் கோளாறால் நியாய விலைக் கடைகளில் விநியோகம் பாதிப்பு: தீர்வு காண வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 21- சர்வர் கோளாறால் நியாய விலைக் கடைகளில் விநியோகம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாநிலச் செயலாளர் ப.செல்வராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்கான (POS) சர்வர் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக முறையாக இயங்கவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வர் பிரச்சனையை உடனடியாக சரிசெய்யக் கோரி துறை ஆணையர் அலுவலகத்திலும், பொது விநியோகத் திட்டத் துறை அலுவலர்களிடமும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தினந்தோறும் முறையிட்டும் இதுவரை நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தேங்கி வருவதுடன், அவற்றின் நகர்வு பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் ஏழை, எளிய மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறால் உருவாகும் பிரச்சனைகளுக்கு ஊழியர்களை பொறுப்பாக்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. பொதுவிநியோகத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதுதான். எனவே, நிர்வாகத்தின் தொழில்நுட்பக் குறைபாட்டின் சுமையை ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் சுமத்தாமல், அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

மேலும், (POS) சர்வர் தடையின்றி செயல்படுவதற்கான நிரந்தர தொழில்நுட்பத் தீர்வை ஏற்படுத்துவதுடன், சர்வர் கோளாறு ஏற்படும் காலங்களில் மாற்று நடைமுறையை உருவாக்கி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பொது விநியோகத் திட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பொதுமக்களுக்கும், நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் இடையே தேவையற்ற மோதல் போக்கு உருவாகாத வகையிலும் தமிழக அரசு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.