தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதிய உரிமை பாதுகாக்கத் தீவிர போராட்டங்களே தீர்வு - கே.ஜி. ஜெயராஜ்

15 Dec 2025, 2:48 pm
ஓய்வூதிய உரிமை பாதுகாக்கத் தீவிர போராட்டங்களே தீர்வு - கே.ஜி. ஜெயராஜ்
<p><strong>ஓய்வூதிய உரிமை பாதுகாக்கத் தீவிர போராட்டங்களே தீர்வு</strong></p> <p>அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் கோயம்புத்தூரில் நடை பெற உள்ளது. மாநாட்டின் பொது அரங்க நிகழ்ச்சி யைப் பிரபல ஊடகவியலாளர் என்.ராம் துவக்கி வைக்கிறார். சி.ஐ.டி.யு. தலைவர் டி.கே. ரங்கராஜன் உட்படப் பல தலைவர்களும், ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை யின் உயர் அதிகாரியான வந்தனா குப்தா (சி.ஜி.சி.ஏ. - டி.ஓ.டி.) அவர்களும் பங்கேற்று உரை யாற்ற உள்ளனர். &nbsp;சங்கம் சாதித்த முக்கிய வெற்றிகள் &nbsp;சங்கம் 2009-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து, ஓய்வூதியர்களின் உரிமைகளுக் காகத் தேசிய அளவில் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதன் விளைவாக, 01.01.2017 முதல் நிலுவையுடன் ஓய்வூதிய மாற்றம், 78.2 சதம் ஐ.டி.ஏ. இணைப்புடன் பென்ஷன் மறுநிர்ணயம், மற்றும் ஓய்வூதியத்துக்கான 60:40 நிதி நிபந்தனை ரத்து போன்ற முக்கியச் சாதனைகளைப் பெற்றுள்ளது. மேலும், மருத்துவ வசதிகள் மற்றும் சிக்கலான குடும்ப ஓய்வூதியர் தனிநபர் பிரச்சனைகளுக்கும் சங்கம் தீர்வு கண்டுள்ளது. தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (என்.சி.சி.பி.ஏ.) மற்றும் சர்வதேச ஓய்வூதிய ஸ்தாபனத்திலும் (டி.யு.ஐ. &nbsp;பி&amp;ஆர்) முக்கிய உறுப்பினராக இருந்து, போராட்டங்களை முன்னெடுத்துச் செயல்படு வதுடன், பி.எஸ்.என்.எல்.இ.யு., பி.எஸ்.என்.எல்.சி.சி.டபிள்யூ.எஃப். உள்ளிட்ட கூட்டு இயக்கங் களிலும் பங்கேற்று வருகிறது. பென்ஷன் மாற்றத்தில் தாமதமும் நிர்வாகத்தின் இழுத்தடிப்பும் &nbsp;பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 01.01.2017 முதலான ஊதிய மாற்றத்தின் அடிப்படையிலான பென்ஷன் மாற்றம் என்ற &nbsp;கோரிக்கையைச் சங்கம் தீவிரமாக வலியுறுத்தி யது. துவக்கத்தில், ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்குப் பிறகே பென்ஷன் மாற்றம் சாத்தியம் என நிர்வாகம் எடுத்த நிலைப்பாட்டால் தாமதம் ஏற்பட்டது. இது பென்ஷன் விதி முறைக்கு முரணானது. &nbsp;24.08.2022 அன்று சங்கம் தில்லியில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியின் நிர்பந்தத்தால் நிர்வாகம் இறங்கி வந்தது. எனினும், சில சங்கங்கள் 7-வது சம்பள கமிஷன் பிட்மண்ட் அடிப்படையில் பென்சன் மாற்றம் செய்ய வலியுறுத்தி தில்லி நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததைக் காரணம் காட்டி, நிர்வாகம் கோப்பைக் கிடப்பில் &nbsp;போட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து நிர்வாகம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து, பென்ஷன் மாற்றத்தை அமல் படுத்தாமல் காலவரையின்றி இழுத்தடிக்கிறது. இதனால் பல ஓய்வூதியர்கள் பலன் பெறாம லேயே உயிரிழந்துள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே நியாயமான முறையில் இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் எனச் சங்கம் நிர்வாகத்தை வற்புறுத்தி வருகிறது. &nbsp;எஸ்.டி. பிரிவு &nbsp;ஊழியர்களுக்கான அநீதி &nbsp;2019-இல் விருப்ப ஓய்வில் வெளியேற்றப் பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த எஸ்.டி. &nbsp;(பழங்குடியின) பிரிவினருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு என்ற பெயரில் எக்ஸ்கிரேஷியா, மாதாந்திர பென்ஷன், ஓய்வூதிய பலன்கள் &nbsp;ஆகியவை இன்றுவரை முடக்கி வைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்துச் சங்கம் குரல் கொடுத்ததன் விளைவாக, 30.11.2023 அன்று தெளிவான வழிகாட்டுதலுடன் பென்ஷன் இலாக்கா உத்தரவு பிறப்பித்தது. எனினும், இந்த அநீதி இன்னமும் தொடர்வதால், உடனடியாகப் பலன்களை விடுவிக்குமாறு சங்கம் போராடி வருகிறது. &nbsp;நாடாளுமன்றக் குழு பரிந்துரைகள் நிராகரிப்பு &nbsp;ஓய்வூதியர் நலன் துறைக்கான 110-வது நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த முக்கியப் பரிந்துரைகளை நிதிச்சுமையைக் காரணம் காட்டி அரசு நிராகரித்துள்ளது: &nbsp;&bull; மாவட்டம் தோறும் சி.ஜி.ஹெச்.எஸ். நல மையம் துவக்குதல். &nbsp;&bull; மருத்துவப் படியை ரூ. 1000/-லிருந்து ரூ. 3000/- ஆக உயர்த்துதல். &nbsp;&bull; &nbsp;&nbsp; &nbsp;65 வயது முதல் ஐந்தாண்டுக்கு ஒரு முறை 5% பென்சனை உயர்த்தித் தருதல். &nbsp;&bull;&nbsp;&nbsp; &nbsp;கம்யூட் செய்த பென்சனை 10 வருடம் 8 மாதத்திற்குப் பிறகு திரும்பிக் கொடுப்பது. இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். &nbsp;புதிய தாக்குதல்களுக்கு எதிரான சவால்கள் &nbsp;பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓ.பி.எஸ்.) ரத்து &nbsp;செய்து, பணியாளர் பங்களிப்பு அடிப்படை யிலான புதிய ஓய்வூதியத் திட்டங்களை (என்.பி.எஸ். மற்றும் யு.பி.எஸ்.) சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. இது பென்ஷன் பாதுகாப்பு இல்லாத மோசடி திட்டம் என்பதால், ஓ.பி.எஸ்.ஸை மீண்டும் அமல்படுத்துமாறு அரசை வலியுறுத்துகிறது. மேலும், ஓய்வூதியச் செலவுகளைக் குறைக்கும் பெயரில், பென்ஷன் விதிகளில் (சி.சி.ஏ. பென்ஷன் ரூல்ஸ்-2021) அரசு செய்துள்ள சட்டத் திருத்தத்தையும் சங்கம் வன்மையாகக் கண்டி க்கிறது. 8வது சம்பள கமிஷன் குறிப்பில் &nbsp;பென்ஷன் &nbsp;மாற்றம் தவிர்க்கப்பட்டதும் கண்டனத்துக்குரியது. சங்கம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் புதிய தொழிலாளர் விரோதச் சட்டங் களை வாபஸ் பெறவும், 2019-இல் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையைத் திரும்ப வழங்கவும் கோரிக்கை விடுக்கிறது. மேற்கண்ட அனைத்துப் பிரச்சனை களையும் விவாதித்து, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களின் கோரிக்கைகளைத் தீர்க்கவும், பென்ஷன் உரிமையைப் பாதுகாக்கவும் தீவிரப் போராட்டத் திட்டங்களை வகுத்து, எதிர்காலச் செயல்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்கக் கோவையில் கூடும் 5வது அகில இந்திய மாநாடு தனது கடமையை நிறைவேற்றும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.