தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செர்பியாவைக் கைப்பற்றிய மாணவர்கள் - ஜெ.டீலன் ஜெஸ்டின்

28 Oct 2026, 9:20 pm
செர்பியாவைக் கைப்பற்றிய மாணவர்கள்  - ஜெ.டீலன் ஜெஸ்டின்

செர்பியாவைக் கைப்பற்றிய மாணவர்கள் - ஜெ.டீலன் ஜெஸ்டின்

தென்கிழக்கு ஐரோப் பிய நாடான செர்பியாவில், சுமார் 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளார். வீழ்த்தியவர்கள் மாணவர்கள். கல்விச் சீர்திருத்தம் உள்ளிட்டகோரிக்கைகளுக்காக நீண்டகாலம் போராடிய மாணவர் இயக்கம், தேர்தல் களத்திலும் வெற்றி பெற்றிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 66 லட்சம் மக்கள் கொண்ட இந்த நாட்டில், வுசிக்கின் செர்பிய முற்போக்குக் கட்சி (SNS) பலத்ததோல்வியைச் சந்தித்துள்ளது.

நோவி சாட் விபத்திலிருந்து தொடங்கிய போராட்டம்

2024இல் நோவி சாட் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அரசின் ஊழலும் அலட்சியமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி, மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியான போராட்டங்களை நடத்தினர். இது அரசியல் அமைப்பில் மாற்றம் கோரும் இயக்கமாக வளர்ந்தது. மக்கள் கொந்தளிப்பைத்தொடர்ந்து, 2026 செப்டம்பரில் நாடாளுமன்றத்தைக் கலைத்துத் திடீர்த் தேர்தலை அறிவித்தார் வுசிக்.தேர்தல் அறிவிப்பு முதல், மாணவர்கள் மக்களிடம் நேரடியாகச் சென்றனர். கல்விப் பிரச்சனைகளையும் ஊழல்ஒழிப்பையும் முன்வைத்து, செர்பியாவின் முக்கிய நகரங்கள் வழியே 10 நாட்கள் தொடர்ச்சியாக சைக்கிள்பேரணி நடத்தினர். பல எதிர்க் கட்சிகள், மாணவர்களுக்கு ஆதரவாகத் தங்கள் வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

வரலாறு காணாத வாக்குப்பதிவு, தனிப்பெரும்பான்மை

கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவாக 65% வாக்குகள் பதிவாகின. மாணவர் ஆதரவு பெற்ற “மாணவர் பட்டியல்” (ஸ்டூடன்ட் லிஸ்ட்) கூட்டணி 52.7% வாக்குகளுடன், 250 இடங்களில் சுமார் 140ஐக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மை பெற்றது. வுசிக் கூட்டணி 39.2% வாக்குகளுடன் 103 இடங்களோடு ஆட்சியை இழந்தது. “இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம்; ஸ்டூடன்ட் லிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது” என்று வுசிக் ஒப்புக்கொண்டார்.

ஊழல், சர்வாதிகாரப் போக்கு, முறைகேடுகளுக்கு எதிராக ஒருமாணவர் இயக்கம் ஜனநாயக வழியில் நீண்டகால ஆட்சியாளர்களை வீழ்த்தி, புதிய அரசியல் யுகத்தைத் தொடங்கியிருப்பது உலக அளவில் முக்கியவரலாற்று நிகழ்வு.அடுத்து என்ன?அரசு அமைப்பது, பிரதமரைத் தேர்வு செய்வது, ஊழல் தடுப்பு, சட்டத்தின் ஆட்சி போன்ற வாக்குறுதிகளைநிறைவேற்றுவது ஆகியவை மாணவர் அணிக்கு முன் உள்ள சவால்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிரும்பும் செர்பியா, ரஷ்யா, சீனாவுடனும் நீண்டகால உறவு கொண்டது; புதியஅரசின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையும் என்பது கவனிக்கப் படும்.

உலகெங்கும் மாணவர், இளைஞர் போராட்டங்கள்

ஐரோப்பாவின் பல நாடுகளில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், செர்பிய வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான்:

• பிரான்ஸ்: ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான பள்ளிக் கட்டமைப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்தார்.

• இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா: கல்வி நிதி, ராணுவச் செலவு, கட்டாய ராணுவ சேவை, பல்கலைக்

நிதிக் குறைப்புக்கு எதிராக மாணவர்கள் போராடினர். அல்பேனியாவில் ஊழல், வேலையின்மைக்கு எதிராகப் பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரி இளைஞர்கள் போராடினர்.

• இந்தியா 2026: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மாணவர் போராட்டம் நாடு முழுவதும் பரவியதால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

• வங்கதேசம் 2024: அரசு வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாண வர் போராட்டம் நாடு தழுவிய இயக்கமாகி, ஆகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா பதவி விலகினார்.

• கென்யா (2024–25): வரி உயர்வுக்கு எதிரான இளைஞர் போராட்டத்தால் 2024 நிதி மசோதாதிரும்பப் பெறப்பட்டது.

• நேபாளம் (2025) : சமூக ஊடகத் தடைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் ஊழலுக்கு எதிரான இயக்கமாகி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்; இடைக்கால அரசு அமைந்தது.

• இந்தோனேசியா (2025): கல்வி, பொதுச் சேவை நிதிக் குறைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் போராடினர்; முன்மொழியப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தங்களையும் அரசு கைவிட வேண்டியிருந்தது.

• மொராக்கோ (2025): இளைஞர் போராட்டத்தால் சுகாதாரம், கல்விக்கு நிதி அதிகரிக்கப்படும் என மன்னர் அறிவித்தார்.

• மடகாஸ்கர் (2025): இளைஞர் போராட்டங்களால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இத்தகைய எழுச்சிகள் மேலும் தொடரும் என்றே தெரிகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.