தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்!

27 Sept 2026, 2:07 am
கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்!

கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்!

கோவை, செப்.26-கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் நலனை காக்க, தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்க கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 8 ஆவது மாநாடு, சனியன்று ஆனைமலை, மருதமலை ஆண்டவர் திருமண மண்டபத்தில் தோழர் பி.திருமலைசாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ப.பழனிசாமி மாநாட்டு கொடிகைய ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.செல்வராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்

தார். மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி,

மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி, சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில இணைச்செயலாளர் எம்.கனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டில், ‘விபி ஜி ராம்ஜி’ திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊரக வேலை வாய்ப்புத்திட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 200 நாட்கள் வேலை, தினக்கூலியாக ரூ.800 வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு நிலப் பட்டா வழங்கி, இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் நலனை காக்க, தனி நலவாரியம் அமைக்க வேண்டும். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையை ஆனைமலை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஏ.துரைசாமி, செயலாளராக தி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவராக கே.மகாலிங்கம், மாவட்ட துணைச்செயலாளராக கவிதா உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலச் செயலாளர் சி.துரைசாமி நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்டக்குழுஉறுப்பினர் பி.ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.