ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை
2 Jun 2026, 8:58 pm

ஆணவ படுகொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை

அமைச்சர் வன்னியரசு பேட்டி

திருநெல்வேலி, ஜூன் 2- ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப் படும் என நெல்லையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நெல்லையில் தெரிவித்தார்.

நெட்டூரில் ஒரு கும்பலால் வெட்டப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு திங்கட் கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை களை முறையாக அளிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.

அப்போது நெல்லை ஆட்சியர் ஆனந்த மோகன், எஸ்பி பிரசன்ன குமார், டீன் ரேவதிபாலன் ஆகியோர் உட னிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கும்பலால் தாக்கப்பட்டு நெல்லை மருத்துவ சிகிச்சையில் பெற்று வருபவர்களை முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்துள்ளேன்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தனிச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்த துறை உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோ சனை நடத்தப்பட்டது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் முறையாக சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுள் ளோம்.

பொதுமக்கள் மீது நடத்திய தாக்கு தல் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக்கூடாது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் புறக்காவல் நிலை யம் அமைக்கவும், துப்பாக்கி ஏந்திய போலீசாரை காவல் பணியில் ஈடுபடுத்த வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி யில் ரேசன் கடை அமைக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நெட்டூரில் ரேசன் கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதுதான் அரசின் நிலைப்பாடு. தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக் கப்படும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப் பட்ட ராம்குமார் குடும்பத்துக்கு முதல் கட்டமாக ரூ.1.35 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பிற பாதிக்கப்பட்டவர்கள் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்ட விதிக ளின்படி உடனடி நிவாரணம் வழங்குவ தில் சிக்கல் உள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை வன்கொடு மை பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவள வன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.