முந்தய பக்கம்

பாலக்கோட்டில் செந்தில்குமார் வாக்குசேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
பாலக்கோட்டில் செந்தில்குமார் வாக்குசேகரிப்பு

பாலக்கோட்டில் செந்தில்குமார் வாக்குசேகரிப்பு

தருமபுரி, ஏப்.9- பாலக்கோடு தொகுதி யை வார்டு வாரியாகச் சென்று செல்ல உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி. என்.வி.எஸ்.செந்தில்குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், காரியமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட எலுமிச்சன அள்ளி, நாயக்கன் கொட்டாய், எட்டி யாவூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாழனன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பாலக் கோடு சட்டமன்றத் தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றிட உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ் வில், திமுக ஒன்றியச் செயலாளர் கோபால், தேர்தல் பணிக்குழு ஒருங் கிணைப்பாளர் குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், தொழிற் நுட்ப அணி நிர்வாகி அறிவுரசு, சிபிஎம் நிர்வாகிகள் ஜி.நக்கீரன், பி.முருகன், மனோகரன், விசிக மாவட்டச் செயலா ளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram