பாலக்கோட்டில் செந்தில்குமார் வாக்குசேகரிப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>பாலக்கோட்டில் செந்தில்குமார் வாக்குசேகரிப்பு</strong></p>
<p>தருமபுரி, ஏப்.3- பாலக்கோடு தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார் பில் திமுக வேட்பாளர் டி. என்.வி.எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று காரி மங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மாட்லாம் பட்டி, பெரியாம்பட்டி, முக்குளம், எர்ரன அள்ளி உள்ளிட்ட பகுதி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித் தார். இதைத்தொடர்ந்து வெள்ளியன்று ஜக்க சமுத்திரம், ஜிட்டாண்ட அள்ளி, பிக்கன அள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப் போது, இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வீடு, இலவச வீட்டுமனை பட்டா, கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில், தொகுதி பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, பார்வையாளர் டி.அரியப்பன், மாநில விவ சாய அணி துணைச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்டப் பொருளாளர் முருகன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் கண்ணபெரு மாள், சரவணன், கோபால், பொறுப்பாளர் ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.</p>
