தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 Jul 2026, 9:28 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தவெக எம்எல்ஏ அளித்த புகார் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சம்மன்!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெக ஆட்சியை கவிழ்க்க, தன்னிடம் ரூ. 35 கோடிக்கு பேரம் நடத்தியதாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், ஐ.பி.டி.எஸ். எனும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக் கரசு உள்பட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தியாகராஜன் (மேடவாக்கம்), நரேஷ் (பெசன்ட்நகர்), ரமேஷ் மற்றும் கார்த்தி (கரூர்), செல்வன் (பள்ளிக்கரணை), சீனிவாசன் (மணப்பாக்கம் அதிமுக பிரமுகர்), ராஜேஷ் (அஸ்தினாபுரம்) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகி யோரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை போலீசார், கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் இன்று சம்மன் அளித்தனர். இந்தச் சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக் கொண்டார். ஜூலை 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

லண்டன் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வரு மான மு.க. ஸ்டாலின், சனிக்கிழமையன்று தனது குடும்பத்துடன் லண்டன் புறப்பட்டுச் சென்றார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், மு.க. ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, இங்கி லாந்தின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர்கல்வி பயின்று வருகிறார். இந்நிலை யில், இம்மாதம் நடைபெறவுள்ள அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். விழாவுக்குப் பின் சுமார் 10 நாட்கள் லண்டனில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், ஜூலை 20-க்குப் பிறகு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் புறப்படுவதற்காக சென்னை விமான நிலை யம் வந்த மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து லண்டன் செல்கிறார். வெளிநாடு புறப்படுவதற்கு முன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “இரு வாரங்கள் அயலகம் சென்றாலும் தனது மனம் அறிவாலயத்தி லேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் புதிய இயக்குநராக எஸ்.பி. செல்வகுமரன் பொறுப்பேற்று உள்ளார். இப்பதவியில் இருந்த எம். சேஷையா பணி ஓய்வு பெற்றதை அடுத்து செல்வகுமரன் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் சென்னை அணுமின் நிலை யத்தின் தலைமை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 1988-ஆம் ஆண்டு திருச்சி என்.ஐ.டி.யில் மெக்கானிக் கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற செல்வகுமரன், 1989-இல் என்.பி.சி.ஐ.எல். நிறுவனத்தின் முதலாவது உள்நிலை பயிற்சிப் பிரிவில் சேர்ந்தார். அணுமின் நிலை யங்களைத் தொடங்குதல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் 36 ஆண்டு களுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உண்டு. 2002-2003 காலகட்டத்தில் சென்னை அணுமின் நிலை யத்தின் 2-வது பிரிவில் குளிரூட்டி குழாய்களை முழுமை யாக மாற்றியமைக்கும் பணியில் முக்கியப் பங்காற்றிய செல்வகுமரன், 26 டிசம்பர் 2004 அன்று சுனாமி அலை கள் கல்பாக்கம் கடற்கரையைத் தாக்கியபோது நிலை மையை திறம்பட கையாண்டு, நிலையத்தின் இரு பிரிவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார் என இந்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்!

சென்னை: தவெக ஆட்சியைக் கவிழ்ப்ப தற்காக அக்கட்சியின் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், திமுக முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது, இவர்கள் இருவரும், வெளிநாடு தப்பிவிடாத வகையில், அவர்களுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீ ஸூம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

பனையூரில் குவிந்த அதிமுக, திமுக-வினர்!

சென்னை: தவெக ஆளும் கட்சியான பின்னர், பல்வேறு கட்சி களைச் சேர்ந்தவர்கள், போட்டிபோட்டு தவெக-வில் இணைந்து வரு கின்றனர். இவ்வாறு கட்சியில் சேருபவர்களுக் காக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை தவெக ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், இந்த வார சனிக்கிழமை (ஜூலை 4) அன்று, கரூ ரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கீதா மணிவண்ணன், தியாக ராய நகர் வி.பி. கலை ராஜன், நிலக்கோட்டை அன்பழகன், உசிலம் பட்டி பாண்டியம்மாள், கூடலூர் ஜெய்சீலன், சத்தியபாமா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் சின்னசாமி, முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன் னாள் எம்.பி.க்கள் பிர பாகரன், பார்த்திபன், பையூர் சந்தானம் ஆகி யோர் தவெக-வில் இணைந்தனர். அதிமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வனும் தமிழக வெற்றிக் கழ கத்தில் இணைந்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகனின் மகன் சுந்திப் ஆனந்தும் தவெகவில் இணைந்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.