சேந்தநாடு - சென்னை புதிய பேருந்து வழித்தட
31 Jan 2026, 5:27 pm
<p><strong>சேந்தநாடு - சென்னை புதிய பேருந்து வழித்தட</strong></p>
<p>ம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் கள்ளக்குறிச்சி, ஜன.31- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேந்தநாடு பகுதியில் புதிய வழித்தட பேருந்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேர்ந்த நாடு கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சேந்தநாடு கிராமத்தில் இருந்து திம்மரட்டி பாளையம்,சேந்தமங்கலம்,கெடிலம் வழியாக சென்னைக்கு புதிய அரசு பேருந்து சேவையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், வி.சி.க.மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.</p>
