தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை 9 போலீசாருக்கான தண்டனை ஏப். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2 Apr 2026, 3:50 pm
சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை 9 போலீசாருக்கான தண்டனை ஏப். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
<p><strong>சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலை 9 போலீசாருக்கான தண்டனை ஏப். 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு</strong></p> <p>மதுரை, ஏப். 2 - தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றவாளி களாக அறிவிக்கப்பட்டுள்ள 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஜூன் 19 அன்று காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் &nbsp;மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ் ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 &nbsp;பேருக்கு எதிராக விரிவான குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப் பட்டன. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை சிபிஐ இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பிறப்பித்த கறார் உத்த ரவு காரணமாக, மார்ச் 23 அன்று &nbsp;தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக் குமரன் உறுதி செய்திருந்தார். தண்ட னை விவரங்கள் மார்ச் 30 அன்று அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந் தார். ஆனால், ஏப்ரல் 2-ஆம் தேதி க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வியாழனன்று &nbsp;நடை பெற்ற விசாரணையில், குற்றவாளி கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜ ராகினர். அவர்களிடம் குடும்ப பின்னணி, கல்வி, சொத்து விவ ரங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து நீதிபதி தனித்தனியாக கேட்டறிந் தார். வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், இது மனித &nbsp;உரிமைக்கு எதிரான அரிதினும் அரி தான காவல் கொடூர வழக்காகும் என்பதால், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை அல்லது வாழ்நாள் முழு வதும் சிறைவாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவல் நிலை யத்தில் நடைபெற்ற தாக்குதலால் இருவர் உயிரிழந்தது சமூகத்தையே அதிர்ச்சியடையச் செய்ததாகவும் வாதிட்டார். குற்றவாளிகள் தரப்பு வழக்கறி ஞர்கள், இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை அல்ல என்றும், ஐந்தரை ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலை, உடல்நிலை, குடும்ப சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர்கள், &ldquo;எந்த தவறும் செய்யாத இருவரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கி உயிரிழக்க வைத்துள்ளனர்; எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்&rdquo; என கண்ணீருடன் முறையிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்டறிந்த நீதிபதி முத்துக் குமரன், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை ஏப்ரல் 6 அன்று அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.