முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

13 Nov 2025, 3:30 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

தில்லி குண்டுவெடிப்புக்கு 50 மணிநேரம் கழித்து, இது ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” என மோடி அரசு இறுதியாக ஒப்புக்கொண்டது. ஆனால் பாகிஸ்தானைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  பாகிஸ்தான் இல்லாமல் இந்தியாவில் எந்த பயங்கரவாதத் தாக்குதலும் நடக்க முடியுமா? வேறு ஏதேனும் சதி உள்ளதா? விளக்கம் எப்போது கிடைக்கும்?

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

தேசிய அளவில் மோடி முன்னெடுத்த திட்டங்கள் எதுவும் அமலாகவில்லை என்ற தகவலை நாடாளுமன்றக் குழு வெளியிட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கென அறிவிக்கப்பட்ட 6 முன்னணி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 36,800 கோடி ரூபாயில், வெறும் 7,800 கோடி ரூபாய்தான் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

இந்தியாவின் தலைநகரமான தில்லியின் மிக நெரிசலான இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தயார்நிலை குறித்த கேள்விகள் மீண்டும், மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தில்லி குண்டுவெடிப்பு தொடர்பாக மோடி அரசு எப்போது விளக்கம் அளிக்கும்?

பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா

ஒலிம்பிக் தொடரில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்புக்கு என்னை தேர்வு செய்திருப்பது எனக்கு பெருமைக்குரிய, உணர்வுப்பூர்வமான தருணம் ஆகும். இது எனது 3ஆவது ஒலிம்பிக். ஆனால் முதல்முறையாக அணிக்கு தலைமை தாங்குவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.

Share
FacebookXWhatsAppTelegram