தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஏ.கிருஷ்ணமூர்த்தி காலமானார் கடலூரில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

17 Feb 2026, 3:36 pm
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  ஏ.கிருஷ்ணமூர்த்தி காலமானார் கடலூரில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் &nbsp;ஏ.கிருஷ்ணமூர்த்தி காலமானார் கடலூரில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி</strong></p> <p>கடலூர், பிப்.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி தோழர் ஏ.கிருஷ்ணமூர்த்தி (94) கடலூரில் செவ்வாயன்று (பிப்.17) காலமானார். &nbsp;கட்சியினராலும் பொதுமக்களாலும் அன்புடன் &lsquo;ஏ.கே.&rsquo; என்று அழைக்கப்பட்ட இவர், கடலூர் அழகப்பா நகரில் வசித்து வந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மேற்பார்வை பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வுக்குப் பிறகும் பொதுநலச் சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும், அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகியாகவும் சிறப்பாகச் செயல்பட்டார். மேலும், கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு ஆலோசகராகவும், அழகப்பா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தோழர் சுர்ஜித்தை பாதுகாத்தவர் இவரது வாழ்வில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த இக்கட்டான காலகட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் கடலூர் வழியாக வேறு ஒரு ஊருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல வேண்டியிருந்தது. அப்போது நிலவிய கலவரச் சூழல் காரணமாகப் காவல்துறையினர் பாதுகாப்பு கருதி அவரைத் தடுத்தனர். அந்த ஆபத்தான நேரத்தில், மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்ட தோழர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, &nbsp;சுர்ஜித்தை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பாகத் தங்க வைத்து உபசரித்து அனுப்பி வைத்தார். &nbsp;உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அன்னாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு லதா (எ) ஜம்பு என்ற மனைவியும், கே. அழகானந்தம் என்ற மகனும், டாக்டர் கே. மாலதி என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சிகள் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் மஞ்சக்குப்பம் மின் மயானத்தில் நடைபெறவுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், &ldquo;ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் கட்சியின் துவக்க காலத்திலிருந்து உறுதியாக நின்றவர் தோழர் ஏ. கிருஷ்ணமூர்த்தி. அவரது மறைவு கட்சிக்கும், கடலூர் மாவட்டத்திற்கும் பேரிழப்பாகும்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.