தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்திரிகையுலகின் அறப்போராளி தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு

28 Jun 2026, 12:41 am
பத்திரிகையுலகின் அறப்போராளி  தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு
<p><strong>பத்திரிகையுலகின் அறப்போராளி தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவு</strong></p><p>சென்னை, ஜூன் 27- பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காகவும், விளிம்பு நிலை மக்களின் குரலாகவும் அரை நூற்றாண்டு காலம் களமாடிய மூத்த பத்திரிகையாள ரும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் சனிக்கிழமையன்று திருவாரூ ரில் காலமானார். அவருக்கு வயது 71. சில மாதங்களாக உடல்நலக் குறை வால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விடுதலைப் போராட்ட வீரரும், பண்ணை அடிமை முறைக்கு எதிராகப் போராடிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் மகனான இவர், தனது தந்தையின் வழியில் சமூகப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். பத்திரிகை யாளர்கள் அமைப்பிற்குள் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, “ஒற்றுமையே பலம்” என்ற கொள்கையுடன் அனைவரை யும் ஒருங்கிணைக்கும் சமரசத் தூதராகத் திகழ்ந்தார். தலைநகரம் முதல் கிராமப்புறங்கள் வரை பணியாற்றும் கடைக்கோடி நிருபர்களுக்கும் அரசு அங்கீகாரமும், சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அவர், பத்திரிகையாளர் நல வாரி யத்தில் அனைவரையும் உறுப்பினராக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்நாளில் அரசு வழங்கிய பத்திரிகையாளர் ஓய்வூதியத்தைக் கூடப் பெற மறுத்து, நேர்மையான மற்றும் தியாகம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். இவரது மறைவு ஊடகத் துறைக்கும், தொழிலாளர் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. இவரது இறுதிப் பயணத்திற்குத் தமிழக அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று டியூஜெ நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோழர் பி.எஸ்.டி.புருஷோத்தமனின் மறைவிற்கு மாநில நிர்வாகிகள் போளூர் சுரேஷ், சாம்பியன் கே.முத்து, வந்தவாசி ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் வேளாங்கன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜேந்திரகுமார், உமர்ஷெரிப், மாவட்ட நிர்வாகிகள் தேவேந்திரன், ம.மீ. ஜாபர், அப்சர் பாஷா உள்ளிட்ட பிரஸ்கிளப், எம்யூஜெ, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம், பிரஸ் கில்ட் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரி விக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஞாயிறன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை முகலிவாக்கம், பிளாட் 16, மஞ்சுளா என்கிளேவ், குமுதம் 3வதுதெரு, போரூர் சென்னை -125 உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.