முந்தய பக்கம்

விழுப்புரத்தில் மூத்த செய்தியாளர் மறைவு: சிபிஎம் இரங்கல்

1 hour before
விழுப்புரத்தில் மூத்த செய்தியாளர் மறைவு: சிபிஎம் இரங்கல்
<p><strong>விழுப்புரத்தில் மூத்த செய்தியாளர் மறைவு: சிபிஎம் இரங்கல்</strong></p><p>விழுப்புரம், ஜூலை 29– விழுப்புரத்தில் புதன்கிழமை மறைந்த மூத்த செய்தியாளரின் உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினர். விழுப்புரம் மாவட்ட த்தில் &#39;மாலைமுரசு&#39; நாளி தழில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகை யாளர் எம். ஜெயதேவன் (வயது 85), உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெய தேவனின் உடலுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ ஆர். ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. வீர மணி மற்றும் வி.தொ.ச எஸ்.அபிமன்னன் ஆகி யோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொட ர்ந்து, அவரது குடும்பத்தி னருக்குத் ஆறுதல் தெரி வித்தனர். இதேபோல், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் கே. தமிழேந்தியின் மனைவி அன்புரத்தினம் (வயது 59) திடீர் உடல்நலக் குறை வால் மறைந்தார். அவரது இல்லத்திற்கும் நேரில் சென்ற சிபிஎம் நிர்வாகிகள், தமிழேந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram