சிபிஎம் மூத்த தோழர் வி.ராமையன் காலமானார்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>சிபிஎம் மூத்த தோழர் வி.ராமையன் காலமானார்</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் சிபிஎம் கிளைச் செயலாளர் வி. ராமையன்(75) உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை காலமானார். இவருக்கு, மனைவி தேன்மொழி, மகன் நரேந்திரன், மகள் நளினி ஆகியோர் உள்ளனர். அவரது இறுதி நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. மறைந்த தோழர் வி.ராமையன், கட்சியின் ஆரம்ப காலம் முதல் நீண்ட காலமாக கட்சிப்பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தோழர்கள் ஆர்.சி. பழனிவேலு, கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி, மெரீனா பூ. ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெஞ்சமின், ஞானசூரியன், ஜீவா, பாலு மற்றும் லெனின், சுரேஷ், மூக்கையன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
