சிபிஎம் மூத்த தோழர் ஜெயராமன் மறைவு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>சிபிஎம் மூத்த தோழர் ஜெயராமன் மறைவு</strong></p>
<p>தஞ்சாவூர், மார்ச் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆம்பலாப்பட்டு குடிக்காடு கிளையின் மூத்த தோழர் ஜெயராமனின் மறைவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் வளர்ச்சிக்கும், உழைக்கும் மக்களின் நலனுக்காகவும் நீண்ட காலம் பணியாற்றிய தோழர் ஜெயராமனின் மறைவு, கட்சிக்கும் அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது உடலுக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ், கட்சியின் மூத்த தலைவர் கோ. நீலமேகம், எம். சரவணன், ஆம்பல் துரை.ஏசுராஜா, மாதவன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சியின் போது, மறைந்த தோழரின் தியாகத்தைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு சிவப்புத் துண்டு அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலர்மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.</p>
