தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரியலூர் மாவட்ட மூத்த தோழர் எஸ்.என்.துரைராஜ் மறைவு! சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்

7 Mar 2026, 2:36 pm
அரியலூர் மாவட்ட மூத்த தோழர் எஸ்.என்.துரைராஜ் மறைவு!  சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்
<p><strong>அரியலூர் மாவட்ட மூத்த தோழர் எஸ்.என்.துரைராஜ் மறைவு! &nbsp;சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்</strong></p> <p>சென்னை, மார்ச் 7 - அரியலூர் மாவட்ட மூத்த தோழர் எஸ்.என். துரைராஜ் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக்குழு உறுப்பினராகவும், பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னராகவும், கைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும், தோழர் களால் &lsquo;எஸ்.என்.டி.&rsquo; என்று தோழமை யோடு அழைக்கப்பட்ட மூத்த தோழர் எஸ்.என். துரைராஜ் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எஸ்.என். துரைராஜ் 1968- ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத் திலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலும் கட்சிக் கிளைகளை உருவாக்குவதில் அரும்பாடுபட்டவர். பெரம்பலுர் - அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீண்ட காலமாக செயல்பட்டவர். ஜெயங் கொண்டம் - அரியலூர் தாலுகாச் செய லாளராகப் பணியாற்றிய காலத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்களுக்காக ஏராளமான போ ராட்டங்களை நடத்தியவர். &nbsp;கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக நீண்டகால மாக பணியாற்றிய போது, நெசவா ளர்களின் கூலி உயர்வு - போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளு க்கு போராட்டங்களை முன்னெடுத்து சிறைக்குச் சென்றவர். கைத்தறி நெசவா ளர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கியவர். அதன் விளைவாக ஆர்.774 சின்னவளையம் பருத்திப் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பழுக்கற்ற முறையில் நேர்மையாக பணியாற்றியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கைத்தறி - நெசவாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். &nbsp;தோழர் எஸ்.என்.டி. மறைவால் துய ருற்றுள்ள அவரது மனைவி தோழர் குப்பம்மாள் அவர்களுக்கும், மகன்க ளுக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.