முந்தய பக்கம்

மூத்த தோழர் காளிதேவி காலமானார்

8 Feb 2026, 3:55 pm
மூத்த தோழர் காளிதேவி காலமானார்
<p><strong>மூத்த தோழர் காளிதேவி காலமானார்</strong></p> <p>சென்னை, பிப். 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் காளிதேவி (88), வயது மூப்பின் காரணமாக &nbsp;ஞாயிறன்று (பிப். 8) காலமானார். 45 ஆண்டுக ளுக்கு முன்பு பீகாரிலிருந்து &nbsp;தமிழகம் வந்து திரு வொற்றியூரில் குடியேறிய இவர், கடினமான சூழலிலும் இரும்புத் துகள்களைப் பிரித்தெடுக்கும் தொழிலைச் செய்து தன் வாழ்வைத் தொடங்கினார். புலம் ம்பெயர்ந்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர். தனது குடும்பம் முழுவதை யும் கட்சிப் பணிகளில் ஈடு படுத்தியவர். இவரது மகன் லெனின் குமார் வாலிபர் சங்கத்தில் இருந்தபோது காவல்துறை தாக்குதலுக்கு உள்ளானபோது, அவ ருக்குத் துணையாக அஞ்சா மல் நின்றவர். பின்னர் லெனின் குமார் விபத்தில் உயிரிழந்த நிலையிலும், கொள்கை உறுதியோடு இருந்த காளிதேவி, திரு வொற்றியூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அவரது உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தர் ராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, வடக்கு பகுதி செயலாளர் எஸ். கதிர்வேல், மாமன்ற உறுப்பி னர் ஆர்.ஜெயராமன், நிர்வா கிகள் சுரேஷ்பாபு, கே.வெங் கடையா, அலமேலு, தங்க சாமி, அஜிதா உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் திங்களன்று (பிப். 9) காலை 10 மணியளவில் எர்ணா வூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram