தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேத்தூரில் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் செல்லப்பிள்ளை மறைவு

16 Mar 2026, 4:46 pm
சேத்தூரில் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் செல்லப்பிள்ளை மறைவு
<p><strong>சேத்தூரில் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் செல்லப்பிள்ளை மறைவு</strong></p> <p>இராஜபாளையம், மார்ச் 16&ndash; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மூத்த &nbsp;தோழரும், ஜமீன் &nbsp;எதிர்ப்பு போராட் டங்களில் தீவிரமாக செயல்பட்டவரு மான தோழர் செல் லப்பிள்ளை (97) மறைவுக்கு பல்வேறு கட்சி &nbsp;நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இராஜபாளையம் மேற்கு ஒன்றி யத்திற்கு உட்பட்ட சேத்தூரைச் சேர்ந்த அவர், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி காலத்திலிருந்து கட்சியில் இணைந்து சமூக போராட்டங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தவர். அவரது மறைவையொட்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் &nbsp;குழு உறுப்பினர் அர்ஜூனன், மாவட்டச் செய லாளர் குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சுந்தர பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தன குமார் உள்ளிட்டோர் அவரது இல்லத் திற்கு நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மூத்த தோழர்கள் நீர்காத்த லிங்கம், கணேசன், தங்கவேல், வாலிபர் &nbsp;சங்க மாவட்டச் செயலாளர் பரமேஸ்வ ரன், ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். சிபிஎம் இரங்கல் இந்நிலையில் அவரின் மறைவுக்கு சிபிஎம் மாவட்டக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு வருமாறு: 1930ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத் &nbsp;தில் பிறந்த அவர், 1952ஆம் ஆண்டு ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பின ராக இணைந்தார். பின்னர் தாலுகா துணைச் &nbsp;செயலாளர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினராக பணியாற்றினார். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவரான சீனிவாசராவ் அவர்களின் உரையை கேட்டதன் மூலம் அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1953 முதல் 1978 வரை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் வார்டு உறுப்பி னர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேத்தூர் ஜமீன்தாரை எதிர்த்து &nbsp;ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி யிட்டதன் மூலம் ஜமீன் எதிர்ப்பு போராளி யாகவும் அறியப்பட்டார். 1980ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவராக பணியாற்றினார். 1986ஆம் ஆண்டு சேத்தூர் &nbsp;பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டு 5 ஆண்டுகள் அந்தப் பதவி யில் பணியாற்றினார். இவ்வாறு பொதுச்சேவையில் சிறப்பாக பணியாற்றிய தோழர் செல்லம் பிள்ளையின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் &nbsp;ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றோம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.