ஓசூரில் சிஐடியு மூத்த தலைவர் வி.சாமுவேல் காலமானார்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>ஓசூரில் சிஐடியு மூத்த தலைவர் வி.சாமுவேல் காலமானார்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, ஏப்.6 - ஓசூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,சிஐடியூ தலைவர்களில் ஒருவராக நீண்ட காலம் செயல்பட்ட தோழர் வி.சாமுவேல் (வயது 69) உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்5) இரவு காலமானார். காரைக்குடியில் 8.4.1957 ல் பிறந்து 1981 ஆம் ஆண்டில் ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் I இல் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்ததார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சி தொழிலகப்பகுதி குழு,மாவட்ட சிஐடியு மையம் உருவாக்கப்பட்டது முதல் 2015 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் வரை மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டார். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சானசந்திரம் பகுதியில் குடியிருந்து வந்த அவர் பணி ஓய்வுக்கு பிறகு மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு பயிற்சி அளித்து வந்தார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தகவல் அறிந்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் சுரேஷ் மாநகர செயலாளர் நாகேஷ்பாபு,ஒன்றிய செயலாளர் ஆர்.கே.தேவராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்ட குழு உறுப்பினர் இருதயராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேது மாதவன் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.ஜெயராமன்,சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன்,முன்னாள் செயலாளர் சி.முத்து, நடைபாதை வியாபாரிகள் சங்க முன்னாள் துணைத் தலைவர் நாராயண மூர்த்தி.விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எம்.எம்.ராஜு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார்,அசோக் லேலண்ட் யூனிட் 1, 2 சிஐடியு அணி நிர்வாகிகள் மறைந்த தோழர் வி.சாமுவேலுக்கு செங்கொடி போர்த்தி,மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மாலையில் சாணசந்தரம் இடுகாட்டில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.</p>
