ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பெரும் அவதி! வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனையை கைவிட வேண்டும்!
28 Sept 2026, 11:06 pm

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பெரும் அவதி! வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனையை கைவிட வேண்டும்!

சென்னை, செப். 28 -ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதால், வங்கிக் கணக்கோடு ஆதார் எண்ணைஇணைக்கும் நிபந்தனையைக் கைவிடவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:பெரும் எண்ணிக்கையில் முதியோர் பாதிப்புமுதியோர் ஓய்வூதியமானது, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிகணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஆதார்இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக் கணக்கான வர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும், முதியோர் ஓய்வூதியம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்துமுறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் அறிவிப்பால் கடும் மன உளைச்சல்கடுமையான வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களைப் பாதிக்கக்கூடியது. ஆதார் மையங்களுக்கும், வங்கிகளுக்கும் உடன் அழைத்துச் செல்வதற்கும் உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.அரசின் இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்திஇருப்பதை கருத்தில் கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படவேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு கட்டாயம் ஆக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப் பட்டு உள்ளது.