மூத்த குடிமக்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிடுக! உலக மூத்த குடிமக்கள் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்
1 Oct 2026, 11:34 pm

மூத்த குடிமக்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிடுக! உலக மூத்த குடிமக்கள் தினக் கருத்தரங்கில் வலியுறுத்தல்

மதுரை, அக்.1-70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தற்போதைய ஓய்வூதியத்துடன் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையைப் பெற்றுக் கொண்டு, அனைத்து மருத்துவமனைகளிலும், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின்கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் என்.ஜெயச்சந்திரன் வலியுறுத்தினார்.

உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, மதுரை மாவட்ட தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் மதுரை மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் வியாழக் கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.பிச்சைராஜன் தலைமைவகித்தார். மாவட்டச் செயலாளர் அ.பாலமுருகன் வரவேற்றார்.

“மூத்த குடிமக்களும் - நமது நாடும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆர்.வாசுதேவன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.பரமேஸ்வரன், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் ஆர்.மாரிச்சாமி, தமிழ்நாடு ஓய்வு பெற் றோர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ஈ.சாலமோன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க (சிஐடியு) மாவட்டச்செயலாளர் ஆர்.நாகராஜன் ஆகியோர் பேசினர்.

“வேர்களை மதிக்காத தேசம்” என்ற தலைப்பில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் என்.ஜெயச்சந்திரன் பேசினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்டத் தலைவர்எம்.ராமசாமி நன்றி கூறினார்.மூத்த குடிமக்களை பாதுகாத்திட வேண்டும்கருத்தரங்கில் பேசியவர்கள், குடும்பத்தையும் சமூகத்தையும் வழிநடத்துவதில் மூத்த குடிமக்களின் பங்கு முக்கியமானது. குழந் தைகள் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முதியோர் களின் வழிகாட்டுதல் அவசியம். பல்வேறு காரணங்களால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரியது. எனவே, குடும்பத்தில் மூத்த குடிமக்களை மதித்து பாதுகாக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றனர்.

மாநிலத் தலைவர் என்.ஜெயச்சந்திரன் பேசுகையில், “70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தற்போதைய ஓய்வூதியத்துடன் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வூதியதாரர்களிடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக மாதந்தோறும் ரூ.644பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைபெற்றுக் கொண்டு, அனைத்து மருத்துவமனைகளிலும், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.அங்கன்வாடி, சத்துணவு, கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தாளர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்சஓய்வூதியம் வழங் கப்படாத நிலை உள்ளது. அவர் களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய

மாக ரூ.7,850 வழங்க வேண்டும். மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம், மருத்துவ மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.