தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிரின் மூத்த முகவர் தோழர் பி.தங்கவேலு காலமானார்

30 Jan 2026, 5:56 pm
தீக்கதிரின் மூத்த முகவர் தோழர் பி.தங்கவேலு காலமானார்
<p><strong>தீக்கதிரின் மூத்த முகவர் தோழர் பி.தங்கவேலு காலமானார்</strong></p> <p>கோவை, ஜன.30&ndash; கோவை மாநகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதிர் நாளிதழை விநியோகித்த அர்ப்பணிப்புமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் பி. தங்கவேலு (78) வெள்ளியன்று காலமானார். 1962-இல், தனது 9-வது வயதிலேயே குடும்பச் சூழல் காரணமாக பவுண்டரி தொழிலாளியாகப் பணியைத் தொடங்கியவர் தங்கவேலு. சித்தாபுதூர் பகுதியில் இருந்த &lsquo;மக்கள் முன்னணி&rsquo; படிப்பகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவருக்கு, அன்றைய தீக்கதிர் சின்னசாமியின் நட்பு மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. 1970-இல் &lsquo;இன்டர்நேஷனல் பவுண்டரி&rsquo;யில் பணியில் சேர்ந்த அவர், அங்கு சிஐடியு (CITU) தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராகவும், சித்தாபுதூர் கட்சியின் கிளைச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றினார். 1975-இல் நிறுவனம் மூடப்பட்டபோது, தொழிலாளர்களுக்காகப் போராடி உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தந்தது அவரது தொழிற்சங்கப் பணியில் முக்கிய மைல்கல்லாகும். 1978-ஆம் ஆண்டு தீக்கதிர் சின்னசாமியிடமிருந்து கோவை நகரப் பகுதி விநியோகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மதுரையிலிருந்து அதிகாலை 4:00 மணிக்கு வரும் ரயில் பார்சலைப் பெற்று, சுமார் 100 கி.மீ சுற்றளவிற்கு நண்பகல் 12 மணி வரை இடைவிடாது விநியோகம் செய்தார். 2005-ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியைச் செவ்வனே தொடர்ந்தார். அவரது இந்த அசாத்திய உழைப்பே, கோவையில் தீக்கதிர் நாளிதழின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, பின்னாளில் தீக்கதிர் கோவை பதிப்பு உருவாவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தங்கவேலு துவக்கிவைத்த விநியோக பணியினைத் தொடர்ந்து பழையூர் ஆறுமுகம், டி.வி. ரமணி கோவிந்தராஜ், சகாபுதீன், &nbsp;பாலசுந்தரம், சீனிவாசன், சபரிகிரி தாஸ் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான முகவர்கள் உருவாகினர். இதன் காரணமாக கோவை நகரத்தின் தீக்கதிர் விநியோகம் விரிவடைந்தது. இந்த வளர்ச்சியின் முத்தாய்ப்பாகவே தீக்கதிர் &nbsp;கோவை பதிப்பு உருவாகவும் அடித்தளமிட்டது. தமிழ் மட்டுமின்றி, மலையாள வாசகர்களிடையே தேசாபிமானி நாளிதழை கோழிக்கோடு மற்றும் திருச்சூர் பதிப்புகள் வரை கொண்டு சென்றார். அத்துடன் செம்மலர், பீப்பள்ஸ் டெமாக்ரஸி போன்ற இதழ்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இவரது பணியால் நூற்றுக்கணக்கான வாசகர்கள் உருவாகினர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களாகவும் மாறினர். தீக்கதிர் நாளிதழின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, இவரது நீண்டகால சேவையைப் பாராட்டி கட்சியின் அப்போதைய மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் இவரை கௌரவித்தார். &nbsp;தோழர் தங்கவேலு அவர்களின் உழைப்பாளி மக்களின் நீண்டதொரு போராட்ட வரலாறு குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் பகுதியில் விரிவாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளியன்று காலமானார். தொழிலாளி வர்க்கத்தின் போர்வாளான தீக்கதிரைத் தோளில் சுமந்த தோழர் தங்கவேலுவின் தியாகம் என்றும் நினைவு கூரப்படும். -எஸ்.ஏ.மாணிக்கம்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.