முந்தய பக்கம்

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்திற்கு ‘அகவை 90’

10 Oct 2026, 10:32 pm
மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்திற்கு ‘அகவை 90’
<p><strong>மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்திற்கு ‘அகவை 90’</strong></p><p>சென்னை, அக்.10-மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தின் 90-ஆவது பிறந்தநாள் விழா, சென்னை உயர்நீதிமன்ற வழக் கறிஞர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள விழா அரங் கில் நடைபெற்றது.இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, என். ஆனந்த் வெங்கடேஷ், எம். தண்டபாணி, எம். ரமேஷ் ஆகியோரும், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லாவும் கலந்துகொண்டனர். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், ஹரிபரந்தாமன், பார்த்திபன், கே.என்.பாஷா ஆகியோரும் பங்கேற்றனர்.வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், துணைத் தலைவர் சசிகுமார், வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி உள்ளிட்ட மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். சட்டத்துறையில் நீண்ட காலம் பணியாற்றி, மக்கள் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து வரும் என்ஜிஆர் பிரசாத்துக்கு வழக்கறிஞர் சமூகம் தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய நிகழ்வாக விழா அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram