தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Apr 2026, 5:38 pm

ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி

ராகவ் சதாவின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து தான் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். பஞ்சாப் மண்ணில் காலடி வைக்க ராகவ் சதா மூலம் பாஜக காய் நகர்த்தி வருகிறது. இது ஒரு காலத்திலும் எடுபடாது.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி சர்மா தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குற்றவாளி ஒருபோதும் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார். ரினிகி சர்மாவின் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணைக்குரிய விஷயம். விசாரணை தான் உண்மையைச் சொல்லும்.

திமுக எம்.பி., தயாநிதி மாறன்

மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி., அம்மாநில முதலமைச்சர், தமிழகத்திற்கு வந்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் நிறுத்தப்பட்ட மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா

ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஆதாரங்களுடன் கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளை பவன் கேரா முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கு அவர்கள் பதிலளிக்காமல் காவல்துறை மூலம் பயமுறுத்த முயற்சிக்கின்றனர்.