தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 Nov 2025, 3:26 pm

தவெகவில் ஐக்கியமானார் செங்கோட்டையன்!

சென்னை, நவ. 27 - அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சென்னை பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தி ருந்தார். இதனைத் தொடர்ந்து, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு நேரில் சென்று 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பின்னணி யில், வியாழனன்று அவர் தவெகவில் இணைந்துள் ளார். அவருட்ன், திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 100 பேரும் தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. மேலும், செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலப் பொறுப்பாளராக அவர் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓசூர் விமான நிலைய ஆலோசகர் தெரிவுக்கு டெண்டர் வெளியீடு!

சென்னை, நவ. 27- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. சர்வதேச நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்து வருகின்றன. குறிப்பாக, ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் ஐந்து இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையம் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தது. தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் இணைந்து இடங்கள் தொடர்பான ஆய்வை நடத்தியது. விரைவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து இடங்களிலிருந்து இருந்து இரண்டு இடங்களை ஆய்வு செய்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. மேலும், பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே ஆலோசனைகளை வழங்குவதற்கு ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

மதுரை, நவ 27 - மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். சிறப்பு காவல்படை காவலரான இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக புதன்கிழமை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் வியாழனன்று இரவு 3 மணியளவில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென நெஞ்சில் தனக்குத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு பின்னர் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை: குற்றவாளிக்கு தண்டனைக் குறைப்பு

சென்னை, நவ. 27 - கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி ஒருவரும், சதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாகவும், இதனிடையே பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இத னால், ஆத்திரமடைந்த சதீஷ், 2022 அக்டோ பர் 13 அன்று கல்லூரிக்குச் செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் தள்ளி சதீஷ் கொலை செய்தார். சிபிசிஐடி போலீசார் நடத்திய இந்த வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம் சதீஷுக்கு தூக்குத் தண்டனை விதித்து 2024 டிசம்பர் 30 அன்று தீர்ப்பளித்தது. இந்த மரண தண்டனையை எதிர்த்து சதீஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இது திட்டமிட்ட செயல் அல்ல, திடீர் ஆத்தி ரத்தில் செய்த செயல் என்று வாதிட்டார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, இது திட்ட மிட்ட செயல் என்று கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆதாரமாக முன்வைத்தார். இதனிடையே, வியாழனன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளி சதீஷூக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்ட னையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல் வழக்கு ரத்து

சென்னை, நவ. 27 - கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதுதொடர்பான வழக்கில் தொடர் புடைய வழக்கறிஞர்களைக் கைது செய்த போது காவல்துறையினருக்கும் வழக்கறி ஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் தாக்கப் பட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காவல்நிலையம் தீக்கிரை யாக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தர வின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுதாரர்கள் அனைவர் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி நிர்மல் குமார் வியாழக்கிழமை (நவ.27) அன்று தீர்ப்பளித்தார்.

பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை: நயினார் சமாளிப்பு

சென்னை, நவ. 27- அதிமுக மூத்த தலை வர் ஒருவரான செங் கோட்டையன் தவெக-வில் இணைந்ததால் அதி முக - பாஜக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த தால் அதிமுக-வுக்கு பாதிப்பு ஏற்படுமா, என்ப தை உறுதியாக சொல்ல முடியாது! என்று குறிப் பிட்டுள்ளார். பாஜகவை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்றும் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் மூன்றாவது அணி: தினகரன் பேட்டி

ஒட்டன்சத்திரம்,நவ. 27- அமமுக பொதுச்செய லாளர் டிடிவி தினகரன், ஒட்டன்சத்திரத்தில் வியாழ னன்று பேட்டி அளித்தார். அப்போது, விஜய்யின் தவெகவில் செங்கோட் டையன் இணைந்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர் பாராத அளவிற்கு மூன் றாவதாக மிகப்பெரிய கூட்டணி அமையும்; அதற் கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட் டுள்ளார்.