மாணவர் அடையாள அட்டை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
27 Jun 2026, 10:06 pm

மாணவர் அடையாள அட்டை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை, ஜூன் 27 - மாணவர் அடையாள அட்டையில் சமூக விவரங்கள் இடம்பெற உள்ளதா க வெளியாகும் தகவல்கள் உண்மைக் குப் புறம்பானவை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் பின்னணி

பள்ளி மாணவர்கள் எளிதாகவும் விரைவாகவும் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளைப் பெறும் நோக்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளி லேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இ-சேவை மையங்கள் மூலமாக இச்சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

தவறான புரிதலுக்கு விளக்கம்

வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக் கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் தொடர்பாக சில தவறான புரிதல்கள் ஏற்பட்டு உள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களுக்கான சமூகச் சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த் துறையும் பள்ளிக் கல்வித் துறை யும் இணைந்து செயல்படும் என்றா லும், அடையாள அட்டையின் வடிவ மைப்பு மற்றும் அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளிக் கல்வித்துறை யின் பரிசீலனை மற்றும் முடிவிற்கு உட்பட்டவையே என்று அவர் தெளிவு படுத்தினார்.

தனியுரிமைக்கு முன்னுரிமை

மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ள விவரங்கள் குறித்து தற்போது துறைகளுக்கிடையேயான ஆலோசனைகள் நடைபெற்று வரு கின்றன. மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு முன்னு ரிமை அளிக்கும் வகையில், எதிர்கா லத்தில் மின்னணு தகவல் ஒருங்கி ணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி யின் பெயர், இரத்த வகை போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறும். பிற விவரங்கள் தேவைக்கேற்ப பாதுகாப் பான QR குறியீட்டு வடிவில் மட்டுமே அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வரு கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பான அனைத்து அம்சங் களும் சம்பந்தப்பட்ட துறைகளின் விரி வான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

‘சாதி தேவையில்லை’

அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி யது. இந்த நிலையில், “ஐடி கார்டில் சாதி தேவையில்லை. ஐ.டி. கார்டு விவகாரம் தவறாக புரிந்து கொள்ளப் பட்டது” என்று அமைச்சர் ராஜ்மோ கன் விளக்கம் கொடுத்துள்ளார்.