தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

22 Mar 2026, 4:19 pm
திருச்சி விரைவு செய்திகள்

அரைவைக்காக ஓசூருக்கு  2000 டன் நெல் அனுப்பி வைப்பு

தஞ்சாவூா், மார்ச் 22-  தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரைவைக்காக அனுப்பப்பட்டு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரைவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி சனிக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 2,000 டன் நெல் ஏற்றப்பட்டு அரைவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை

புதுக்கோட்டை, மார்ச் 22-  தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.  இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தெரிவிக்கையில், “கந்தர்வகோட்டை (தனி) மற்றும் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளரான அமிட்குமார் நிக்கல்ஜி-யை 9345301791 என்ற அலைபேசி எண்ணிலும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வி.விவேகானந்தா ரெட்டியை 9345005278 என்ற எண்ணிலும், திருமயம் மற்றும் ஆலங்குடி தொகுதிக்கு எரிக் சி. லல்லாவாம்புயாவை 9361378750 என்ற எண்ணிலும், அறந்தாங்கி தொகுதிக்கு நகஹன்யுய் ஜிமிக்குவை 9345478824 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் முறைகள், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் தேர்தல் ஆணை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் பொதுப் பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.

சில்வர் டப்பாக்கள் பறிமுதல்

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சாவூரிலுள்ள பார்சல் சர்வீஸ் மையத்தில், ஆவணங்களின்றி கிடந்த ஏறத்தாழ ஆயிரம் சில்வர் டப்பாக்களை, பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் வஉசி நகரிலுள்ள பார்சல் சர்வீஸ் மையத்தில், மூட்டைகளில் சில்வர் டப்பாக்கள் இருப்பதாக தஞ்சாவூர் தொகுதி பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பறக்கும் படை அலுவலர் ஜேக்கப் வினோத் தலைமையிலான குழுவினர் தொடர்புடைய மையத்தில் சோதனை நடத்தியபோது, 6 மூட்டைகளில் ஏறத்தாழ 1,000 சில்வர் டப்பாக்கள் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து, இந்த மூட்டைகளைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், சரக்கு மினி வேன் மூலம் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, இந்த சில்வர் டப்பாக்கள் யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை!  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22-  திருச்சி கன்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு நவாப் எண்டோமெண்ட் அறக்கட்டளை சார்பில், ரம்ஜான் சிறப்பு தொழுகை சனிக்கிழமை  நடைபெற்றது.  இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன், ஆற்காடு நவாப் எண்டோமெண்ட் அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரி பஷீர் அகமது, முஸ்லிம் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் சையது ஜாபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புனித ரமலான் மாதத்தில் நாம் எல்லோரும் வேண்டுவது உலக அமைதி நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் வலிமையானது. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியால் 80 சதவிகித திற்கும் மேற்பட்ட மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. எனவே எந்த அளவுக்குப் போட்டி இருந்தாலும், இந்த தேர்தலில் மதச்சார்பள்ள முற்போக்கு கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.  அதிமுக கூட்டணி குறித்து அடிக்கடி தில்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் இங்கு வந்து கூட்டணி குறித்து தெளிவாக பேசுவதில்லை. இது தமிழக முதல்வர் கூறியது போல், இந்த தேர்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் இடையிலான போட்டியாக மாறி வருகிறது என்பதை காட்டுகிறது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு இடமில்லை. ‘தாமரை’ வளருவது குளத்திலும் குட்டையிலும்தான். ஆனால் தமிழ்நாடு ஒரு பெருங்கடல். இந்த தமிழ்க் கடலில் தாமரை மலர முடியாது” என்றார்.

மின்கசிவு காரணமாக  5 வீடுகள் தீயில் சேதம்

தஞ்சாவூர், மார்ச் 22-  தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் தீயில் எரிந்ததில், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் செருப்பு தைக்கும் தளவாடப்பொருட்கள் எரிந்து சேதமாகின.  தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஸ்கூல் பேக் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன், தனசேகரன், குமார், பாண்டி, ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள் தீயில் எரிந்தது. தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், உடமைகள், சைக்கிள்கள், வாஷிங்மெஷின், ஸ்கூல் பேக்குகள், செருப்பு தைக்கும் தளவாடப் பொருட்கள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.  இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பெரம்பலூர், மார்ச் 22-  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக, முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியரக மத்திய காப்பறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 1,416 வாக்குப்பதிவு கருவிகள், 930 கட்டுப்பாட்டு கருவிகள், 934 வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள்  ஆகியவற்றை பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கும் கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் நடவடிக்கை மார்ச் 23 அன்று முற்பகல் 11 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்கண்டவாறு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தளிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் பதிவெண் வாரியான பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்.  இவ்வாறு பிரித்தளிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்காக, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்காக, வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறைகளுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்படும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி வழியில் பிரித்தெடுப்பது குறித்து விரிவான வழிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் https://www.eci.gov.in/evm-vvpat வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  பட்டய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 22-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் அருண் ஹோட்டலில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மதனமுசாபர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க மாநிலத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் குருசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து இன்றைய நிலையில் நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பில் பணியாளர்களுக்கு உள்ள பாதிப்புகள் மற்றும் வரும் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். நெடுஞ்சாலைத் துறையில் மறு சீரமைப்பின் போது பணி இடங்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது. இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் எண்ணிக்கை இருக்க வேண்டும். உதவி கோட்ட பொறியாளர் பதவி உயர்வை இளநிலை பொறியாளர்களுக்கு 5 வருடத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வலியுறுத்தி, மே 20 ஆம் தேதி, சென்னையில் உள்ள முதன்மை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில நிர்வாகிகள் சாலமன், ராஜ முனியாண்டி, யோகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.