முந்தய பக்கம்

மத்திய பட்ஜெட் குறித்து கல்லூரியில் கருத்தரங்கம்

6 Mar 2026, 3:17 pm
மத்திய பட்ஜெட் குறித்து கல்லூரியில் கருத்தரங்கம்
<p><strong>மத்திய பட்ஜெட் குறித்து கல்லூரியில் கருத்தரங்கம்&nbsp;</strong></p> <p>சென்னை, மார்ச் 6- அம்பத்தூர் அன்னை வயலட் கலை அறிவியல் கல்லூரியில் &lsquo;மத்திய அரசின் வரவு &ndash; செலவு2026 &ndash; 2027ஆம் ஆண்டு திட்ட அறிக்கையினால், இந்திய பொரு ளாதாரத்தில் எற்படக்கூடிய தாக்கம்&rdquo;பற்றிய கருத்தரங்கம் அக்கல்லூரியில் அமைந் துள்ள பொருளியல் துறையில் நடை பெற்றது. இக் கருத்தரங்கில் கல்லூரியின் தலைவர் என்.ஆர். தனபாலன்,என்.ஆர்.டி.பிரேம்குமார், இணைச்செயலாளர் முனைவர் பி.இ.ஆர்.பிரேம்சந்த், கல்லூரி முதல்வர் முனைவர் சி.இனிதா லெபனான் எபன்சி, துணை முதல்வர் முனைவர். ஜாபியாசாலமோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாதாரத் துறை தலைவர் &nbsp;பேராசிரியர் வி.அன்பரசு, பேராசிரியர் எஸ்.சிமியோன் மற்றும் பேராசிரியை ஆர். ஆஷாஆகியோர் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்தனர். கருத்தரங்கின் வரவேற்பு உரையை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி கே. காயத்ரி வழங்கி னார். பொருளாதாரத் துறை கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராக சர். தியாகராயா கல்லூரியின் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். வே. சரவணன் கலந்து கொண்டு, இந்திய அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையினால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தினை் விரிவாக எடுத்துரைத்தார். &nbsp; ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப் &nbsp;படவுள்ள புதிய வருமான வரிச் சட்டம் குறித்தும் அவர் விளக்கினார். ஒன்றிய அரசுக்கு வருமான வரியின் மூலம் 21 விழுக்காடு வருமானமும், கார்ப்ப ரேட் வரியின் மூலம் 18விழுக்காடு வருமான மும், ஜி.எஸ்.டி மூலம் 15 விழுக்காடு வருமானமும் கிடைக்கின்றது என்பதை அவர் எடுத்துரைத்தார். மாணவி எஸ். ஹேமலதா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram