தீட்சண்யா நாடகக்குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம்
1 Jan 2026, 4:52 pm
<p><strong>தீட்சண்யா நாடகக்குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம்</strong> </p>
<p>திருவண்ணாமலை, ஜன.1- திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ் மின் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தீட்சண்யா நாடகக் குழு அனுபவங்கள் குறித்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. தமுஎகச மாநில குழு உறுப்பினர் மு. பாலாஜி, மஞ்சுளா, மா.ரேணுகோபால், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை தலைவர் செந்தில்வேலன், கிளைச் செயலாளர் வசந்த் பிரபு, பொருளாளர் பேரா. சுந்தர்ராஜன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் தீட்சணயா நாடக குழு செயல்பட்ட கால நிகழ்வுகள் குறித்த கருத்துரை நிகழ்த்தப்பட்டது. பாடல்கள், கவிதை வாசிப்பு ஆகிய நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
