முந்தய பக்கம்

பாலின சமத்துவம் குறித்து கருத்தரங்கம்

9 Jan 2026, 3:41 pm
பாலின சமத்துவம் குறித்து கருத்தரங்கம்
<p><strong>பாலின சமத்துவம் குறித்து கருத்தரங்கம்</strong></p> <p>தருமபுரி, ஜன.9- தருமபுரி அரசுக்கல்லூரியில் பாலின சமத்துவம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பாலின உளவியல் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழனன்று நடை பெற்றது. கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் தலைமை வகித்தார். தாவரவியல் துறை தலைவர் விஜயா தாமோ தரன் வாழ்த்திப் பேசினார். பாலின உளவியல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், தமிழ் துறை பேராசிரியர் கு.சிவப்பிரகாசம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகை யில், ஆணுக்குரிய தனித்துவத்தை பெண்ணும், பெண்ணுக் குரிய தனித்துவத்தை ஆணும் புரிந்து கொள்ளுகிற பாலின சமத்துவம் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சமூகத்தில் பார்க்கப்படும் பாலின பேதம் என்பது, மனித வரலாற்றின் மிக பிற்பகுதியில் வந்த ஒரு &nbsp;உளவியல் சிக்கலாகும். இந்த உளவியல் சிக்கல் சமூக வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் மிகவும் ஆபத்தா னது. மனிதர்கள் ஒருவரை உயர்வாகவும், மற்றொருவரை தாழ்ந்தவராகவும் பார்க்கும் போக்கு, சமூக வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும், என்றார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் முடிவில், உள வியல் துறை கௌரவ விரிவுரையாளர் ராமசாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram