கருத்தரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் தமுஎகச மாநாட்டில் அரங்கேற்றம்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>கருத்தரங்கம், இசையரங்கம், நாடக அரங்கம் தமுஎகச மாநாட்டில் அரங்கேற்றம்</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.7 - தமுஎகச மாநில மாநாட்டையொட்டி, 3 ஆவது நாளான சனிக்கிழமை மாலை தமுஎகச கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தரங்கம் அதனையடுத்து, ‘தொடரும் அவலம் துடைக்க’ கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ச.சிகரம் செந்தில்நாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் காணொலி மூலம் உரையாற்றினார். ‘ஆகமத்தின் பெயரால் அநீதி’ என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் உரையாற்றினார். நிகழ்ச்சியை மருதுபாரதி, பெ.ரவீந்திரன், பா.ஹேமாவதி, மு.ஆனந்தன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கவிதை கவிஞர் சுகிர்தராணி, லட்சயா மன்னார், ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகளின் நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. நாடகம் நிகழ்ச்சியின் நிறைவாக, சென்னை கலைக் குழுவின், திரைக்கலைஞர் ரோகிணி பங்கேற்ற “வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி” நாடகம் நடைபெற்றது. பிரளயன் நெறியாள்கை செய்ய, ஜெயகாந்தன், கவிவாணன், நிறங்கள் சிவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.</p>
