தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செமிகண்டக்டர் பயிற்சி மையம் சென்னையில் விரைவில் தொடக்கம்

30 Oct 2026, 11:29 pm
செமிகண்டக்டர் பயிற்சி மையம் சென்னையில் விரைவில் தொடக்கம்

செமிகண்டக்டர் பயிற்சி மையம் சென்னையில் விரைவில் தொடக்கம்

சென்னை,அக்.30-சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை இணைந்து அமைக்க உள்ள சிப் வடிவமைப்பு மற்றும் செமிகண்டக்டர் பயிற்சி மையம் விரைவில் தொடங்கும்என்றுசென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகத்திடம் கூறுகையில், “செமிகண்டக்டர் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இதனால் தான் மத்திய அரசு இந்தியன் செமிகண்டக்டர் மிஷன் 1.0, இந்தியன் செமிகண்டக்டர் மிஷன் 2.0 ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு அரசும்செமி கண்டக்டர் கொள்கையை அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக அதிக அளவில் மனித திறன்கள் தேவைப்படுகின்றன. இதற்கு தேவையான பயிற்சிகள் வேண்டும். இந்தபயிற்சிக்கான ஆரம்பககட்ட தயாரிப்புப்பணிகள் சோதனையில் உள்ளன. செமிகண்டக்டர் துறையில் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசும் மானியம் கொடுக்கிறது. இது தொழில் முனைவோர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய காமகோடி, “தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் சிப் வடிவமைப்பு தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கி விட்டன. இதன்மூலம் மாணவர்கள் ஹார்டுவேர்தொழில்நுட்பத்தில் பணியாற்றி, பின் தொழில்முனைவோர்களாக மாறுவதற்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது.

சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை இணைந்து சிப் வடிவமைப்பிற்கும், பேக்கேஜிங் செய்வதற்கும் செமிகண்டக்டர் பயிற்சி மையம் அமைக்க உள்ளன. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். எனவே பிஈ, பிடெக் படித்தவர்கள் மட்டும் இல்லாமல் டிப்ளமோ படித்தவர்களுக்கும் செமிகண்டக்டர் துறையில் பயிற்சி அளிக்க உள்ளோம். தமிழர்கள் உலகளவில் பணியாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்” என்றார்.

மேலும், தமிழ்நாடு அரசின் செமிகண்டக்டர் கொள்கை குறித்து பேசிய அவர், “இது இங்குள்ள தொழில் முனைவோர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். நம் நாட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறைய தொழிற்சாலைகள் வரவுள்ளன. வர்த்தகம் பெருகி பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

தமிழ்நாட்டில் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான தன்மை கொண்ட நிலப்பரப்புகள் நிறைய உள்ளன. மின்சாரம், தண்ணீர் வசதியும் இங்கு தேவையான அளவுக்கு உள்ளது” என்றும் காமகோடி தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.