தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 Dec 2025, 3:52 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சேமலைகவுண்டம்பாளையம் மூவர் கொலை வழக்கு: திருப்பூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

திருப்பூர், நவ.4 - திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே சேம லைக்கவுண்டம்பாளையத்தில் தோட்ட வீட்டில் குடியிருந்த  மூவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக் கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசி காமணி (78). இவர் மனைவி அலமேலு (75). இவர்களின் மகன்  செந்தில்குமார் (46). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம்  தேதி இரவு இவர்கள் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தபோது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட னர். இதில் அலமேலு அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி  கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.  தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த  சம்பவம் தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். எனினும் கொலை நடந்து 4 மாதத்துக்கு மேல் ஆகியும் துப்பு துலக்க  முடியவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த மார்ச்  மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து  வீட்டில் குடியிருந்த தம்பதி கொலை சம்பவத்தில், அரச்சலூ ரைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48), மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3  பேரும் சேர்ந்து சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தெய்வசி காமணி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்ததும் தெரிய வந்தது.  இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 பேரை யும் கைது செய்தனர். அவர்களிடம் நகை வாங்கிய ஞானசேக ரன், வெண்ணிலா ஆகியோரையும் போலீசார் கைது செய்த னர். இந்த வழக்கில் 3 ஆயிரத்து 440 பக்க குற்றப் பத்திரி கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய் தனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன் றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிபதி குணசே கரன் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜரானார்.  இந்த சம்பவத்தில் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதால்  இந்த வழக்கை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு மாற் றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை  வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மகளிர் நீதிமன் றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் என பீதி நாய்களின் காலடித்தடம் என வனத்துறை விளக்கம்

திருப்பூர், டிச. 4 – பல்லடம் அருகே கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறியதால் மக்கள் பீதியடைந்தனர். அப்பகுதியை ஆய்வு செய்து அங்கு பதிவாகி இருப்பவை மான்கள் மற்றும் நாய்களின் காலடித்தடங்கள் தான் என வனத்துறை விளக்கமளித்துள்ளது. பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் இருந்து காமநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து வனத்துறையினர் அங்குள்ள விளைநிலங்களில் இருந்த காலடித் தடங்களை ஆய்வு செய்தனர். இதில் நாய்கள் மற்றும் மான்களின் காலடித் தடம் மட்டுமே விளைநிலங்களில் பதிவாகி இருக்கிறது. இங்கு சிறுத்தை நடமாட்டம் இல்லை. பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வு

திருப்பூர், டிச. 4 - திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த  புத்தகத் தேர்வு (ஓபன் புக் டெஸ்ட்) குறித்த அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்  வெளியிட்டுள்ள செயல்முறை விளக்கத்தில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டத்தில் முன்னெடுப்பு திட்டமாக பள்ளி  மாணவர்கள் புத்தகங்களை நன்கு படித்து முழுமையாக கருத் துக்களைப் புரிந்து கொள்ளவும்,  அதன் மூலம் போட்டித் தேர் வுகளில் சிறந்த மதிப்பெண் பெரும் வகையில், புத்தகத்தை  வைத்துக் கொண்டு தேர்வு (ஓபன் புக் டெஸ்ட்) நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம்  வகுப்பு பயிலும் மாணவர்களின்  2025- 26 ஆம் கல்வி ஆண்டில்  இதுவரை நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடைப்ப ருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு என மூன்று தேர்வுகளையும்  சேர்த்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இந்தத்  தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் டிச.27 ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல்  பாடத்தேர்வு,  30 ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வு  நடைபெற உள்ளது. இந்த இரண்டு தேர்வுகளும் 100 மதிப் பெண்களுக்கு 30 நிமிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 6 ஆம் தேதி  உயிரியல், 27ஆம் தேதி வேதியியல், 30 ஆம் தேதி இயற்பியல்  பாடத் தேர்வுகள் 100 மதிப்பெண்களுக்கு 45 நிமிடங்கள் நடை பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் வாகனப்பிரச்சாரம்

உடுமலை, டிச.4- தனியார் நிறுவனங்களில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பல் வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று வாகனப்பிரச்சாரம் நடை பெற்றது. உடுமலை தாலுகா செயலாளர் பாலசுப்பி ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தப்  பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ஆர். பழனிச்சாமி துவக்கி வைத்தார். உடுமலை  முக்கோணம் நால் ரோட்டில் துவங்கி ராகல் பாவி, அம்மாபட்டி, சுண்டக்காம்பாளையம், வேலூர், வாளவாடி, சாலையூர், பாப்ப னூத்து பிரிவு, விளாமரத்துப்பட்டி, போதனம்,  கொடிங்கியம், எரிசனம்பட்டி ஆகிய 12   மையங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற் றது. இதில், ஒன்றிய அரசு மாற்றுத்திறனா ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆந்திராவில் வழங்குவதைப் போல தமிழ கத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்  ரூ.6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வழங்க  வேண்டும். தனியார் நிறுவனங்களில் 4 சதவீத  இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. இதில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் எ.மாலினி, மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.குருசாமி, சிஐடியு சங்கத்தின் தலை வர் ஜெகதீசன், விவசாயிகள் சங்க கமிட்டி  உறுப்பினர் தமிழ்த்தென்றல் உள்ளிட்டோர் பேசினர். திரளானோர் பங்கேற்றனர். அதேபோல் திருப்பூர் வடக்கு ஒன்றியம்  திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு  பகுதியில் ஒன்றிய துணைத் தலைவர் கனி  தலைமையில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் ரோசி,  மாவட்டக் குழு உறுப்பினர் சக்திவேல் ஒன்றி யத் தலைவர் பாண்டியன், முருகேசன் உள் ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.