நாடு முழுவதும் சிறுநீரகங்களை விற்று கடனை அடைக்கும்
20 Dec 2025, 2:23 pm
<p>நாடு முழுவதும் சிறுநீரகங்களை விற்று கடனை அடைக்கும் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே நாக்பிட் தாலுகாவில் உள்ள மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ரோஷன் சதாசிவ் குடே ரூ.74 லட்சம் கடனை (வட்டி காரண மாக ஒரு லட்சம் ரூபாய், 74 லட்சமாக உயர்ந்தது) அடைக்க கம்போடியா நாட்டில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை விற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு ரூ.8 லட்சம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த செய்தியால், நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், சனியன்று ரோஷன் சதாசிவ் குடே செய்தியாளர் சந்திப்பின் போது,”கடனை அடைக்கவே ரூ.8 லட்சத்திற்கு சிறுநீரகத்தை விற்றுள் ளேன். நான் மட்டும் சிறுநீரகத்தை விற்க கம்போடியா செல்லவில்லை. என்னு டன் 5 இந்தியர்கள் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன. அவர்கள் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடன் நிலை மோசமாக இருந்ததால், சிறுநீரகங்களை விற்றதாக 5 பேரும் என்னிடம் விளக்கம் அளித்தனர்” என அவர் கூறினார்.</p>
