பறிமுதல் செய்த ரூ. 63 ஆயிரம் ரொக்கம் உரியவரிடம் ஒப்படைப்பு
27 Mar 2026, 3:15 pm
<p><strong>பறிமுதல் செய்த ரூ. 63 ஆயிரம் ரொக்கம் உரியவரிடம் ஒப்படைப்பு</strong></p>
<p>சிதம்பரம், மார்ச் 27 - கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் பகுதி யில் தேர்தல் பறக்கும் படை யினர்கடந்த 20-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ 63 ஆயிரம் இருந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் கலியமலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த காமராஜ்(55) தொழிலாளி என்பது தெரிய வந்தது, இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தேர்தல் நடத்தும் அலு வலர் ராணி உதவி தேர்தல் அலுவலர் பிரகாஷ் ஆகி யோரிடம் ஒப்படைத்தனர், அதனையடுத்து காம ராஜ் தனது நகையை மீட்க பணம் எடுத்து சென்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித் தார் அதை சரிபார்த்து தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனி உரியவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.</p>
