தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிழல்களின் சுழற்சி! - சீனு ராமசாமி

23 May 2026, 10:41 pm
நிழல்களின் சுழற்சி! - சீனு ராமசாமி

நிழல்களின் சுழற்சி! - சீனு ராமசாமி

கலை என்பது எப்போதுமே இருபக்கமும் கூர்மை தீட்டப்பட்ட ஒரு கத்தியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. நாம் அதைக் கவனமாகக் கையாளத் தவறும்போது, அது திரும்பி நம்மையே ஆழமாக அறுத்து விடுகிறது. சரித்திரத்தின் பக்கங்களை அமைதியாகப் புரட்டிப் பார்த்தால் இது புரியும். கலை வெறும் அழகுக்கானது மட்டுமல்ல, அது மனிதர்களின் சமூகத்தையும், அவர்களின் அரசியலையும், ஏன் அதிகாரத்தையுமே தீர்மானிக்கும் ஒரு விசித்திரமான ஆயுதம். இந்தக் கலையின் வீரியம் புரியாமல் அதன் பிடியில் சிக்கி அழிந்தவர்களும் உண்டு, அந்த மாயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு அதன் மூலம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியவர்களும் உண்டு. இது உலகத்தின் எல்லா மூலையிலும், நமது மண்ணிலும் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு சுழற்சி.

சமூகங்களை மாற்றும் சக்தி

அந்தப் பழைய மன்னர்களின் காலங்களை நினைத்துப் பாருங்கள். பிரம்மாண்டமான கட்டடங் களும், காவியங்களும், சிலைகளும் எதற்காக உருவாக் கப்பட்டன? மனிதர்களின் சிறுமையைக் காட்டி, அதிகா ரத்தின் முன் அவர்களை மண்டியிட வைக்கத்தானே. காலம் மாறியபோது, இதே கலை சமூகங்களை மாற்றிய மைக்கும் மாபெரும் சக்தியாக உருவெடுத்தது. பனிபடர்ந்த ரஷ்யாவில் ஸ்டாலின் கலையின் மகத் துவத்தை முழுமையாக உணர்ந்திருந்தார். சிதறிக் கிடந்த உழைக்கும் மக்களையும், ஒரு மாபெரும் தேசத்தையும் ஒன்றிணைக்க அவர் கலையைத்தான் ஒரு பெரும் கருவியாகப் பயன்படுத்தினார். மனிதர் களின் மனங்களைச் செதுக்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அவர் ‘ஆன்மாவின் பொறியா ளர்கள்’ என்று கொண்டாடியதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கலை அங்கே ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் வெளிச்சமாக மாறி யது. ஆனால் அதே கலை, நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் கைகளில் அவனது ஆதிக்கத்திற்கான பிரச்சாரக் கருவியாகவும் மாறியதை சரித்திரம் பார்த்திருக்கிறது.

அதிகாரத்தின் நிழல் ஆதிக்கத்தின் கருவி

கலை எப்போதுமே ஏதோ ஒரு அதிகாரத்தின் நிழலா கவே இருக்கிறது. அது அரசாங்கத்தின் கையில் இருக்கும்போது ஆதிக்கத்தின் கருவியாகிறது; சாதாரண மக்களின் கையில் கிடைக்கும்போது புரட்சியாக மாறுகிறது. நம்முடைய சுதந்திரப் போராட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைக்காரன் நம் ஊர் ஆயுதங் களைக் காட்டிலும், பாரதியின் பாட்டுக்கும் வ.உ.சி.யின் மேடைப் பேச்சுக்கும்தானே அதிகம் பயந்தான். ஒரு கருத்தும் கலையும் மனிதர்களை எப்படி மாற்றிவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான்.

இதை யோசிக்கும்போது, எம்.கே. தியாகராஜ பாகவ தரையும் எம்.ஜி.ஆரையும் தவிர்த்துவிட்டுத் தமிழக வரலாற்றைப் பேசிவிட முடியாது என்று தோன்று கிறது. 1940-களில் எப்படிப்பட்ட சாம்ராஜ்யம் பாகவதரு டையது! அந்த வெண்கலக் குரலுக்கும் வசீகரத்துக்கும் மயங்காத மனிதர்களே இல்லை. தமிழ்ச் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் அவர். ஆனால், 1944-இல் வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற இருள், பிரிட்டிஷ் அதிகாரத்தின் உருவில் அவரை ஒரு சின்னஞ்சிறு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் எப்படிச் சுருட்டிப் போட்டது! அது ஒரு கிரிமினல் வழக்காகவே இருந்தாலும், ஒரு மாபெரும் கலைஞனின் ஆதிக்கம், அதிகாரத்தின் முன் எவ்வளவு அற்பமாகி வீழ்த்தப்படலாம் என்பதற்கு அது ஒரு துயரமான சாட்சி.

கலையை ஆதிக்கமாக அதிகாரமாக மாற்றுதல்...

பாகவதரின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான அந்தப் பெரும் இருட்டில்தான் எம்.ஜி.ஆர் வந்து நின்றார். அந்த இருமுனைக் கத்தியை எப்படிப் பிடிப்பது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. கலையை எப்படி ஆதிக் கமாக, அதிகாரமாக உருமாற்ற முடியும் என்பதை அவர் கண்டுகொண்டார். திரையில் தன்னை விளிம்புநிலை மக்களின் மீட்பராகக் காட்டிக்கொண்ட அவர், அந்தப் பிம்பத்தை நிஜ வாழ்க்கையிலும் ஒரு அரசியல் அதிகார மாக மாற்றிக் காட்டினார். மனிதர்களின் மனசு விசித்திரமானது. முப்பது வருஷங்களுக்கு ஒருமுறை, ஒரு புதிய நாயகனுக்காகத் தவம் கிடக்கத் தொடங்கிவிடுகிறது அது. நாற்பதுகளில் பாகவதர், சின்னப்பா; எழுபதுகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி; இரண்டாயிரங்களுக்குப் பிறகு ரஜினி, கமல், விஜய் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. இது ரத்தத் திலேயே ஊறிப்போன, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு மரபணுத் தொடர்ச்சி என்றுதான் படுகிறது. சங்க காலத்தில் மன்னர்களையும் புலவர் களையும் கொண்டாடிய அதே மனசுதான், இன்று திரையில் தோன்றும் பிம்பங்களுக்காகவும் ஏங்கு கிறது.

ஆதிவேராக ராமன்

இதன் ஆதி வேராக, ராமன் நாயகனாக வந்த ராமாய ணத்தைக் கூட நாம் பொருத்திப் பார்க்கலாம். ஒரு காவிய நாயகன் எப்படி காலப்போக்கில் கடவுளானார், சிலர் அவரை அவதார புருஷர் என்றனர், வேறு சிலர் மனிதப் பிறப்பு என்றனர்; இந்தக் கதையெல்லாம் நாம் அறிவோம். ஒரு பிம்பம் எப்படி ஆராதனையின் அடையாளமாக மாறுகிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த தொடக் கப்புள்ளி. இப்படித் திரை நாயகர்களைத் தங்கள் வாழ்க் கையின் மீட்பர்களாகப் பார்க்கும் ஒரு தலைமுறை முப்பதாண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிக் கொண் டே இருக்கிறது. அது சமூகத்தில் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பையும், ஒரே மாதிரியான அரசியல் விளைவு களையுமே தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

ஆழ்மன விளையாட்டு சதுரங்கம்

எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வரை, மனிதர்களால் சுயமாக எதையுமே செய்துவிட முடிவ தில்லை. கலை என்பது வெறும் திரைவெளிச்சம் அல்ல; அது மனிதர்களின் ஆழ்மனதோடு விளையாடும் ஒரு சதுரங்கம். கலையின் பின்னால் சுழலும் இந்த ஆதிக் கத்தைப் புரிந்துகொள்ளாத போது, ஒரு கலைஞன் பாகவ தரைப் போலக் காலத்தின் பெருவெளியில் காணாமல் போகிறான். ஆனால், அதைக் கூர்மையாகப் புரிந்து கொண்டு சரியாகக் கையாளும் கலைஞனோ, எம்.ஜி.ஆரைப் போல அதிகாரத்தின் உச்சியை அடை கிறான். பழைய நிழல்கள் மறைகின்றன, புதிய நிழல்கள் முளைக்கின்றன. ஆனால் கலையும் ஆதிக்கமும் பின்னிப் பிணைந்த இந்தச் சுழற்சி மட்டும் எந்த மாற்றமுமில் லாமல் அப்படியேதான் நீடிக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.