தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விதை ஆய்வு குழுவினர் திடீர் ஆய்வு

5 Jun 2026, 10:47 pm
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில்  விதை ஆய்வு குழுவினர் திடீர் ஆய்வு
<p><strong>தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் விதை ஆய்வு குழுவினர் திடீர் ஆய்வு</strong></p><p>தஞ்சாவூர்/புதுக்கோட்டை, ஜுன் 5- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரைப்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில், திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் தலைமையில், விதை ஆய்வாளர்கள் மோகன்தாஸ், சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அம்மாபேட்டை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், குறுவை பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் விலைப்பட்டியல், முளைப்பு அறிக்கைகள், பதிவு சான்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் விதை விற்பனையாளர்கள் ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர். ஆய்வின்போது, தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா, விதை ஆய்வாளர்கள் பாலையன், சுரேஷ், நவீன் சேவியர், சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.