தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதை மசோதா சட்டம் 2025 அமெரிக்க ஏகாதிபத்திய சதி விவசாயிகள் சங்க செயலாளர் துளசி நாராயணன் சாடல்

18 Dec 2025, 5:31 pm
விதை மசோதா சட்டம் 2025 அமெரிக்க ஏகாதிபத்திய சதி விவசாயிகள் சங்க செயலாளர் துளசி நாராயணன் சாடல்
<p><strong>விதை மசோதா சட்டம் 2025 அமெரிக்க ஏகாதிபத்திய சதி விவசாயிகள் சங்க செயலாளர் துளசி நாராயணன் சாடல்</strong></p> <p>சென்னை, டிச.18 - விதை மசோதா சட்டம் 2025 அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் துளசி நாராயணன் பேசியுள்ளார். தாளாண்மை உழவர் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து புதனன்று (டிச.17) சென்னையில் விதை சட்ட மசோதாவும் உழவர் உரிமையும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னையில் தாளாண்மை உழவர் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் துளசி நாராயணன் &nbsp;பேசினார். இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பில் தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்ட நகல் எரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இந்தக் கருத்தரங்கில் தி.வேல்முருகன் (தவாக), அப்துல் சமது (மமக), கார்த்திகேய சிவசேனாதிபதி (திமுக), வன்னி அரசு (விசிக) உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.