தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதை மசோதா 2025 விவசாயிகளின் தன்னாட்சி மீதான கார்ப்பரேட் போர் - எஸ். கிருஷ்ணசுவாமி

3 Jan 2026, 2:20 pm
விதை மசோதா 2025 விவசாயிகளின் தன்னாட்சி மீதான கார்ப்பரேட் போர்  - எஸ். கிருஷ்ணசுவாமி
<p><strong>விதை மசோதா 2025 விவசாயிகளின் தன்னாட்சி மீதான கார்ப்பரேட் போர்</strong></p> <p>மத்திய வேளாண் அமைச்சகம் நவம்பர் 12 அன்று வெளியிட்ட &lsquo;விதை மசோதா 2025&rsquo; வரைவு, இந்தியாவின் உணவு இறையாண்மையின் மீது நடத்தப்படும் ஒரு கொடூரமான தாக்குதலாகும். அரசு சார்பு ஊடகங்கள் இதனை &lsquo;நவீனமயமாக்கல்&rsquo; என்று கொண்டாடினாலும், விவசாய சங்கங்களைப் பொறுத்தவரை இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் &ldquo;ஆக்கிரமிப்பு சாசனம்&rdquo; ஆகும். கடன் சுமையிலும் பருவநிலை மாற்றத்திலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, விதைகள் என்பது வெறும் இடுபொருள் அல்ல; அது அவர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையாகும். கார்ப்பரேட் நலன்களுக்கான வரைவு இந்திய விதைச் சந்தை சுமார் 3.82 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.35,000 கோடி) &nbsp;மதிப்புடையது. இதில் பேயர் (Bayer), கார்டேவா (Corteva), சின்ஜெண்டா (Syngenta) பி.ஏ.எஸ்.எஃப் (BASF) ஆகிய நான்கு பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. உலக விதைச் சந்தையில் 56 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த நான்கு நிறுவனங்கள், இந்திய விவசாயிகளிடம் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடந்த 2019-இல் கொண்டு வரப்பட்ட இதே போன்ற முயற்சி, விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த 2025 வரைவு, &ldquo;தொழில் செய்வதை எளிதாக்குதல்&rdquo; (Ease of Doing Business) என்ற பெயரில் கார்ப்பரேட் லாபத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்புதிய மசோதாவின்படி, பாரம்பரிய விதை ரகங்களைத் தவிர மற்ற அனைத்து விதைகளுக்கும் &lsquo;மத்திய பதிவு&rsquo; (Centralized Registration) கட்டாயமாக்கப்படும். கியூஆர் கோடு (QR Code) மூலம் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் மத்திய அங்கீகார முறை கொண்டு வரப்படும். இதன் மூலம் மாநில அரசுகளின் ஆய்வு அதிகாரத்தைப் பறித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தேசியச் சந்தையை ஆக்கிரமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மசோதாவில் விதிகளை மீறுவோருக்கு 30 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், அந்தத் தொகை அரசுக்குத்தான் செல்லுமே தவிர, பயிர் இழப்பால் தற்கொலை விளிம்பிற்குச் செல்லும் விவசாயிகளுக்குச் சேராது. கூட்டாட்சித் தத்துவமும் இறையாண்மையும் முடக்கம் இந்த மசோதா மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கிறது. 1983-ஆம் ஆண்டின் விதை (கட்டுப்பாட்டு) ஆணையின்படி, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதை விலையையும் ராயல்டியையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்தன. உதாரணமாக, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் இதன் மூலமே விதை விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால் புதிய வரைவு, இந்த அதிகாரங்களை நீக்கிவிட்டு, ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை மாநிலங்கள் உடனடியாக (&ldquo;forthwith&rdquo;) அப்படியே ஏற்க வேண்டும் என வற்புறுத்துகிறது. மேலும், வெளிநாட்டு விதைச் சான்றிதழ் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத அல்லது பரிசோதிக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட (GM seeds) விதைகள் நுழையவும் இது வழிவகை செய்யும். இது தேசத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மைக்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். விவசாயிகளின் போர்க்குரல் 1.6 கோடி உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS), இந்த மசோதாவை &ldquo;கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சரணடையும் முக்கூட்டுத் தாக்குதல்&rdquo; என்று சாடியுள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையின் பின்னணியில், அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களைத் தளர்த்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மசோதாவில் விதைகள் தோல்வியடைந்தால் விவசாயிகளுக்குக் காலக்கெடுவுடன் கூடிய இழப்பீடு வழங்கும் சட்டப்பூர்வமான அம்சம் ஏதுமில்லை. மாறாக, நிறுவனங்களுக்கு &ldquo;நன்னம்பிக்கை&rdquo; (Good faith) என்ற பெயரில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மீண்டும் நுகர்வோர் நீதிமன்றங்களின் நீண்ட நெடிய இழுபறிக்கே தள்ளப்படுவார்கள். விதை இறையாண்மையைப் பாதுகாக்க, டிசம்பர் 10 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் பாபு கேனுவின் நினைவாக நாடு தழுவிய அளவில் மசோதா நகல்களை எரித்து விவசாயிகள் போராடினர். விதை விலையை ஒழுங்குபடுத்த நிரந்தரச் சட்டப்பூர்வ அமைப்பு, போலி விதைகளை விற்கும் நிறுவனங்களை &lsquo;கருப்புப் பட்டியலில்&rsquo; சேர்த்தல் மற்றும் ஊராட்சி ஒன்றிய (Block) அளவில் இழப்பீட்டுத் தீர்ப்பாயங்களை அமைத்தல் போன்ற திருத்தங்களை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இப்புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் பூர்வகுடி விதை ரகங்கள் அழிந்து, ஒட்டுமொத்த விவசாயச் சுழற்சியும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்கிவிடும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச.28)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.