அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின் அனுமதி
14 Nov 2025, 1:26 pm
<p><strong>அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின் அனுமதி</strong></p>
<p>கோவை, நவ.14- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இனி மேல், மருத்துவமனைக்கு வருவோரின் உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறது. நாளொன்றுக்குச் சராசரியாக 7 ஆயிரத்தில் இருந்து, 9 ஆயிரம் வரையி லான நோயாளிகள் வெளி நோயாளிப் பிரி வில் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானோர் வந்து போவ தால், மருத்துவமனை வளாகத்தில் பாது காப்பை உறுதிப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது, தனியார் ஒப்பந்த அடிப்படை யில் 120 பாதுகாப்புப் பணியாளர்கள் இரவு- பகலாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், அவ்வப் போது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் விளைவாகவே, இந்த சோதனை நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணபிரியா கூறுகையில், பாது காப்புக் காரணங்களுக்காக மெட்டல் டிடெக் டர் மூலம் பரிசோதனை செய்யுமாறு பாது காப்புப் பணியாளர்களுக்கு (செக்யூரிட்டி) அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, மருத்து வமனையின் இரு நுழைவாயில்கள், குழந் தைகள் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்ட முக் கிய இடங்களில் ஏழு மெட்டல் டிடெக்டர்கள் பயன்பாட்டில் உள்ளன, என்றார்</p>
