‘மதச்சார்பின்மையும், இன்றைய தேவையும்’
30 Jan 2026, 5:56 pm
<p><strong>‘மதச்சார்பின்மையும், இன்றைய தேவையும்’</strong></p>
<p>ஈரோடு, ஜன.30- பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஈரோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஈரோடு கூடலிங்கம் திடலில் ‘மதச்சார்பின்மையும், இன்றைய தேவையும்’ என்ற தலைப்பில் வெள்ளியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. சிஓசி தலைவர் வி.மணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலு வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் எஸ்.மகேஸ்வரன் கருத்துரையாற்றினார். பிப்.12 ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து ஓய்வூதியர் சங்க செயலாளர் என்.குப்புசாமி சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களின் இன்றைய நிலை குறித்து, அதன் மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ் விளக்கினார். ‘மதச்சார்பின்மையும், இன்றைய தேவையும்’ என்ற தலைப்பில் சிஐடியு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.ரகுராமன் சிறப்புரையாற்றினார். திரளானோர் கலந்து கொண்ட கருத்தரங்கின் முடிவில், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி நன்றி கூறினார்.</p>
