தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு கண்டனம் மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

11 Nov 2025, 6:02 pm
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு கண்டனம் மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
<p><strong>வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு கண்டனம் மாவட்டத் தலைநகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, நவ.11 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த நவ.4 அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தமிழகத்திற்கு வரும் அபாயம் உள்ளது. எனவே எஸ்.ஐ.ஆரை ஒரு மாத கால அவகாசத்தில் மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் முடிந்த பின்பு கால அவகாசம் கொடுத்து, அதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக திமுக, சிபிஎம் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. &nbsp;திருவாரூர் &nbsp;ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு (எஸ்ஐஆர்)ஐ எதிர்த்து திருவாரூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக, புதிய ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். சிபிஎம் சட்டமன்றக் குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.பி. நாகை மாலி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழுச் செயலாளர் கோ.பழனிச்சாமி, திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். &nbsp;சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ். கேசவராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் இரா. தமிழ்ஓவியா, ஆ. வெற்றி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். &nbsp;தஞ்சாவூர் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்எல்ஏ.வுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்பிக்கள் சு.கல்யாணசுந்தரம், ச.முரசொலி, முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், நா.அசோக்குமார், கா.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் துவக்கி வைத்து பேசினார். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகர திமுக செயலாளரும், மேயருமான சண்.ராமநாதன் நன்றி தெரிவித்தார். &nbsp;திருச்சிராப்பள்ளி &nbsp;திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், மத்திய மாவட்டச் செயலாளர் க.வைரமணி தலைமையில், வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகரச் செயலாளர்கள் மேயர் மு.அன்பழகன், மண்டலக் குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ். ஸ்ரீதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, அப்துல் சமது, முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;புதுக்கோட்டை &nbsp;புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டின் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், &nbsp;சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் வெள்ளைநெஞ்சன், இளமதி அசோகன், தி.க மாவட்டத் தலைவர் அறிவொளி, முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி, வாழ்வுரிமைக் கட்சி நியாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். &nbsp;பெரம்பலூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், திமுக மாவட்ட &nbsp;பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி., சிறப்புரையாற்றினார். &nbsp;பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரியலூர் &nbsp;அரியலூர் அண்ணா சிலை அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என்.சிவா கண்டன உரையாற்றினார். எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நடராஜன், எஸ்டிபிஐ கட்சி அமீர்சுல்தான் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். &nbsp;மயிலாடுதுறை &nbsp;மயிலாடுதுறையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எஸ்.ஆர்-ஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது. &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ். ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. சீனிவாசன் ஆகியோர் &nbsp;உரையாற்றினர். &nbsp;கரூர் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கலாராணி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சின்னசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் சிவா, விசிக மாநகர மாவட்டச் செயலாளர் இளங்கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.