மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம்

தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி முறையமைப்பை பேணி பாதுகாக்கவும், வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து முன்னெடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவது தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக வாக்கு சேகரிப்பது, திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில், அங்குள்ள நடைபாதைகளில் கடைகள் அமைக்கப்பட்டு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.