மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு
7 Apr 2026, 5:38 pm
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு</strong></p>
<p>புதுக்கோட்டை, ஏப். 7- புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், திங்கட்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திருமயம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி திருமயம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆலங்குடி ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வை.முத்துராஜா புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். விராலிமலை விராலிமலை தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.கே.செல்லப்பாண்டியன் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அறந்தாங்கி அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.டி.திருநாவுக்கரசு அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.</p>
<p> </p>
