தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

28 Mar 2026, 4:07 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 28- திமுக தலைமையிலான மதச்சார்  பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி உடன்படிக்கை இறுதி யானது. முன்னதாக தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டி ருந்த நிலையில், கூட்டணி கட்சி கள் போட்டியிடும் தொகுதிகளின்  பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட் டது. பட்டியலை, திமுக பொரு ளாளரும், பேச்சுவார்த்தைக்குழு தலைவருமான டி.ஆர். பாலு, அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழ மையன்று பிற்பகல் 3 மணியளவில் வெளியிட்டார்.  இதன்படி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வரு மாறு: காங்கிரஸ் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப் பட்டிருந்த நிலையில், பொன்னேரி (தனி), திருபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயி லாடுதுறை, காரைக்குடி, சிவகாசி,  திருவாடனை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங் கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்  தங்கரை (தனி), துறையூர் (தனி),  கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய 28 தொகுதிகளில்  அக்கட்சி போட்டியிடும் என்று அறி விக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்த நிலையில், தளி, திருத்துறைப்  பூண்டி (தனி), திருவில்லிபுத்தூர் (தனி), திருப்பூர் வடக்கு, பவானி சாகர் (தனி) ஆகிய தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டி ருந்தது. அதன்படி, காட்டுமன்னார் கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) பண் ருட்டி ஆகிய தொகுதிகளில் விசிக  போட்டியிடுகிறது. மதிமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்திற்கு 4 இடங்கள் முடி வாகியிருந்த நிலையில், மொடக் குறிச்சி, மதுரை தெற்கு, கடைய நல்லூர் (உதயசூரியன் சின்னம்) சீர்காழி (தனிச் சின்னம்) ஆகிய  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. தேமுதிக தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு, விருத்தாசலம், விருது நகர், தருமபுரி, குடியாத்தம் (தனி),  சேலம் மேற்கு, போளூர், பல்லா வரம், திருத்தணி, ஓமலூர், மைலம்  ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள் ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  கட்சிக்கு பாபநாசம் (தனிச் சின்னம்),  வாணியம்பாடி ஆகிய தொகுதி களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு, பொள் ளாச்சி ஆகிய தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சி - நாகப்பட்டினம், மணப்பாறை தொகுதிகளிலும், முக்  குலத்தோர் புலிப்படை கட்சி சிவ கங்கை தொகுதியிலும், மனிதநேய  ஜனநாயக கட்சி சிதம்பரம் தொகுதி யிலும், எஸ்டிபிஐ கட்சி நன்னிலத்தி லும், தமிழர் தேசம் கட்சி நத்தம் தொகு தியிலும் உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 சட்ட மன்றத் தொகுதிகளின் பட்டியல் சனிக்கிழமையன்று வெளி யிடப்பட்டது.  இதன்படி,  1. கீழ்வேளூர் (தனி),  2. கந்தர்வக்கோட்டை (தனி),  3. பத்மநாபபுரம் (மாறுதலுக்கு உட்பட்டது), 4. பழனி 5. திருவொற்றியூர்  ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.