தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலைமைச் செயலகத்தில் புகார் பெட்டி அகற்றம்! முதல்வரின் தனிப் பிரிவில் நேரடியாக மனு அளிக்கலாம்

15 Jun 2026, 9:03 pm
தலைமைச் செயலகத்தில் புகார் பெட்டி அகற்றம்! முதல்வரின் தனிப் பிரிவில் நேரடியாக மனு அளிக்கலாம்

தலைமைச் செயலகத்தில் புகார் பெட்டி அகற்றம்! முதல்வரின் தனிப் பிரிவில் நேரடியாக மனு அளிக்கலாம்

சென்னை, ஜூன் 15 - சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரி வுக்கான புகார் பெட்டி அகற்றப்பட்டு, பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கும் பழைய நடைமுறை மீண் டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் புகார் மனுக்களுடன் தலைமைச் செய லகத்தில் குவியத் தொடங்கினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் காட்டி, தலை மைச் செயலகத்திற்குள் பொது மக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, வெளியிலேயே ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டு, மக்கள் தங்களின் மனுக்களை அதில் போடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த புதிய நடைமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

தூரத்து மாவட்டங்களில் இருந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் முதலமைச்சரை நம்பி நேரில் மனு அளிக்க வரும் தங்க ளுக்கு, இந்த பெட்டி முறை ஏமாற்ற மளிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகளிடம் தங்க ளின் குறைகளை நேரடியாகக் கூற முடியாத சூழல் உருவானதாகவும் புகார்கள் எழுந்தன.

பொதுமக்களின் இந்த கடும் எதிர்ப்பையும் கோரிக்கையையும் பரிசீலித்த அரசு, தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

அதன்படி, வெளியில் வைக்கப் பட்டிருந்த புகார் பெட்டி உடனடி யாக அகற்றப்பட்டு, ‘அனை வருக்கும் அனுமதி இல்லை’ என்ற புதிய கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், பழைய நடைமுறை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இனி பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி தலைமைச் செயலகத்திற்குள் சென்று, முதல்வரின் தனிப்பிரிவில் தங்களின் புகார் மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாகவே வழங்கி அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.