முந்தய பக்கம்

திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்

5 Jan 2026, 6:21 pm
திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>திருப்பூரில் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன. 5 - திருப்பூர் மாவட்ட கல்வி &nbsp;அலுவலகத்தின் முன்பாக இடைநிலை பதிவு மூப்பு &nbsp;ஆசிரியர்கள் இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஜன.5 அன்று ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி மாநிலம் முழுவ தும் மாவட்டக் கல்வி அலுவ லகம் (தொடக்கக் கல்வி) முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்துவ தாக அறிவித்தனர். இதன்படி, திருப்பூர் &nbsp;கே.எஸ்.சி. பள்ளி எதிரில் உள்ள மாவட்டக் &nbsp;கல்வி அலுவலக வளாகத்தில் திங்களன்று &nbsp;திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற பல் லடம் வட்டாரப் பொறுப்பாளர் ஸ்ரீதர், ஊதிய &nbsp;முரண்பாட்டைச் சரி செய்ய வேண்டும் என்று &nbsp;பள்ளிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி னார். ஸ்ரீதருடன், திருப்பூர் தெற்கு வட்டாரப் &nbsp;பொறுப்பாளர் மாதவி செல்வி ஆகியோர் &nbsp;தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத் தில் 512 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram