தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்களுக்கு சீட் : காங்., பாஜகவின் நாடகம்!

22 Mar 2026, 4:19 pm
பெண்களுக்கு  சீட் : காங்., பாஜகவின் நாடகம்!
<p><strong>பெண்களுக்கு &nbsp;சீட் : காங்., பாஜகவின் நாடகம்!</strong></p> <p>கேரள சட்டமன்றத் தேர்தலில் &ldquo;பெண் சக்தி&rdquo; என்றும் &ldquo;பெண்கள் முன்னேற்றம்&rdquo; என்றும் வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும், பெண்களை எவ்வளவு தூரம் ஓரங்கட்டியுள்ளது என்பதைப் பார்த்தால் நகைப்புதான் வருகிறது. காங்கிரஸின் &lsquo;92-ல் 9&rsquo; மேஜிக் 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அதில் வெறும் 9 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளது. &ldquo;ராகுல் காந்தி அவர்களே... இது அநியாயம் இல்லையா?&rdquo; என அக்கட்சியின் பெண் தலைவரான ஷாமா முகமதுவே போர்க்கொடி தூக்கியுள்ளார். &ldquo;திறமை இருந்தால் மட்டும் போதுமா? சீட் கிடைக்காதா?&rdquo; என அவர் எழுப்பியுள்ள கேள்வி, காங்கிரஸின் &lsquo;பெண்கள் இடஒதுக்கீடு&rsquo; முழக்கத்தைத் தெருவிற்கு இழுத்து வந்துள்ளது. கொச்சியில் நடந்த குளறுபடி கொச்சி தொகுதியில் போட்டியிடக் காத்திருந்த ஷாமா முகமதுவை ஓரங்கட்டிவிட்டு, எர்ணாகுளம் டிசிசி தலைவர் முகமது ஷியாஸிற்கு சீட் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை. &ldquo;நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் வீழ்த்தப்படவில்லை&rdquo; என ஷாமா முகமது ஆதங்கத்தோடு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதேபோல் தீப்தி மேரி வர்க்கீஸ் போன்ற சீனியர் பெண் தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளது, கேரளாவில் காங்கிரஸின் ஆணாதிக்க முகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. பாஜகவின் &lsquo;புல்டோசர்&rsquo; கலாச்சாரம் பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல! எட்டுமானூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. சிந்துமோல், தனக்கு சீட் மறுக்கப்பட்டதைக் கண்டித்து தேசியத் தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளார். அந்தத் தொகுதி &lsquo;ட்வென்டி-20&rsquo; (Twenty20) என்ற கூட்டணிக் கட்சிக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. &ldquo;கூட்டணி தர்மம்&rdquo; என்ற பெயரில் சொந்தக் கட்சிப் பெண் தலைவர்களையே புறக்கணிப்பதுதான் பாஜகவின் பாணியாக உள்ளது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு பற்றிப் பேசும் இவர்களுக்கு, வேட்பாளர் பட்டியலில் 10% கூட ஒதுக்க மனமில்லை. இடதுசாரிகள் 12 பெண் சிங்கங்களை ஒரே அடியில் களமிறக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் - பாஜக கட்சிகள் இன்னும் &lsquo;சகுனம்&rsquo; பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் கபட நாடகத்தைக் கேரள மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.